ராஜஸ்தான் களேபரம்: நாங்களே நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவோம்... பாஜகவுக்கு கெலாட் பதிலடி

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் தமது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாங்களே கொண்டு வருவோம்; அதில் வெற்றியும் பெறுவோம் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் திடீரென போர்க்கொடி தூக்கினார். அவருக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

சச்சின் சமாதானம்

சச்சின் சமாதானம்

இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை உருவானது. ஆனாலும் முதல்வர் அசோக் கெலாட் நிலைமையை சமாளித்தார். இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் அணி சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

கெலாட்டுடன் சந்திப்பு

கெலாட்டுடன் சந்திப்பு

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோருடன் நடைபெற்ற சமாதான பேச்சுகளைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் திரும்பினார் சச்சின் பைலட். இன்று முதல்வர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 எம்.எல்.ஏக்களும் கெலாட்டை சந்தித்தனர். அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டிருக்கிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இந்நிலையில் திடீரென காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா அறிவித்தார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கெலாட் அரசை பாதுகாப்பதில் வசுந்தரராஜே சிந்தியாவும் உதவுகிறார் என புகார்கள் எழுந்தன. இதனை திசைதிருப்ப நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவோம் என்றார் சிந்தியா.

Recommended Video

    Sachin pilot திருவிளையாடல் முடிவுக்கு வந்ததா?
    பாஜகவுக்கு பதிலடி

    பாஜகவுக்கு பதிலடி

    இது தொடர்பாக பதில் தந்த முதல்வர் அசோக் கெலாட், எங்கள் அரசு எப்போதும் கவிழாது. எங்கள் அரசுக்கு தேவையான முழு பெரும்பான்மை எங்களிடம் இருக்கிறது. எங்கள் அரசு மீது நாங்களே நம்பிக்கை கோருகிற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருவோம். அதில் வெற்றியும் பெறுவோம் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+