கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் - உதயகுமார் அறிவிப்பு
டெல்லி: நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்றும், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்து உதயகுமார் அளித்த பேட்டி:
தமிழக மக்களை உச்சநீதிமன்றம் கைவிட்டுவிட்டது. மக்களின் கருத்துக்களை மதிக்க நீதிமன்றம் தவறிவிட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டதில்லை, அதைப்போலத்தான் இதையும் ஏற்கப்போவதில்லை.
நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். அணு உலைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மேல் முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கட்டும்.
இதனிடையே தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். கூடங்குளம் அணு உலை பிரச்னை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே கருத்து தெரிவித்து வந்தவர் நாராயணசாமி, தீர்ப்பு குறித்து கூறுகையில், உச்சநீதிமன்றம் அளித்த பாதுகாப்பு தொடர்பான 15 பரிந்துரைகளில் 13 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications