இஸ்லாமியர்களிடம் இனி பொருள் வாங்க மாட்டோம்.. ஒன்று கூடி உறுதி மொழி எடுத்த கிராமம்.. பரபர சம்பவம்
ராய்பூர்: இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டோம் என்று சட்டீஸ்கரை சேர்ந்த கிராம மக்கள் பலர் உறுதிமொழி எடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
வடஇந்திய மாநிலங்களில் நாளுக்கு நாள் மதவெறுப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சாதி ரீதியிலான பிளவு, இந்து இஸ்லாம் பிரிவு என்று வடஇந்தியா முழுக்க மக்கள் பிளவுபட்டு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.
தொடர் வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக வடஇந்தியாவில் அடிக்கடி கலவரம் , மோதல்கள் வெடிப்பதும், குழு வன்முறை நடப்பதும் வழக்கம் ஆகி வருகிறது. முக்கியமாக உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் வெறுப்பு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

உறுதிமொழி
அந்த வகையில்தான் சட்டீஸ்கரை சேர்ந்த கிராம மக்கள் பலர் நேற்று இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டோம் என்று உறுதி மொழி எடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இருக்கும் சுர்குஜா என்ற மாவட்டத்தில் இருக்கும் குந்திகலா என்ற கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகளில் என்று பல நூறு பேர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி உள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இஸ்லாமியர் உறுதிமொழி
அந்த வீடியோவில்.. நாங்கள் எல்லோரும் இந்துக்கள். நாம் இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். இந்த நாளில் இருந்து நாம் இஸ்லாமியர்களின் கடைகளில் எந்த பொருளும் வாங்க கூடாது. நம்முடைய கடைகளை, நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு விட கூடாது. அவர்களுடன் நாம் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.

சட்டீஸ்கர் கிராமம்
அவர்கள் நம்முடைய கிராமத்தில் வந்து எந்த பொருட்களை விற்றாலும் அதை நாம் வாங்க கூடாது என்று இந்துக்கள் இந்த வீடியோவில் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்த வீடியோதான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்த மோதலை தொடர்ந்துதான் கிராம மக்கள் இப்படி உறுதிமொழி எடுத்ததாக கூறப்படுகிறது.

அரா கிராமம்
அதன்படி அரா என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த புத்தாண்டின் போது குந்திகலா கிராமத்திற்கு வந்து கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது இரண்டு கிராம மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதிலுக்கு குந்திகலா கிராம மக்கள் அரா கிராமத்திற்கு சென்று மோதலில் ஈடுப்பட்டு உள்ளனர். இது கலவரமாக உருவெடுத்துள்ளது.

குந்திகலா கிராமம்
இதில் அரா கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குந்திகலா கிராமத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து 6 பேர் போலீசார் மூலம் இரண்டு கிராமத்திலும் கைது செய்யப்பட்டார். இதையடுத்தே இந்துக்கள் அதிகம் இருக்கும் குந்திகலா மக்கள் இஸ்லாமியர்களின் பொருட்களை வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications