‛இந்தியா’ கூட்டணி டமால்? மம்தா பானர்ஜி தயவு எங்களுக்கு வேண்டாம்.. உதறிய காங்கிரஸ் - முற்றிய மோதல்
கொல்கத்தா: "நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியின் உதவியுடன் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீர் ரஞ்சன் பரபரப்பாக கூறி மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் ‛இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான பிளவு என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் 4 ஆலோசனை கூட்டங்களை முடித்துள்ளனர். காணொலி வாயிலாக ஒரு கூட்டம் நடந்து முடிந்தது.

தற்போது ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு பிரச்சனையின்றி முடிய உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ‛இந்தியா’ கூட்டணியில் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி கட்சி 22 தொகுதி, பாஜக 18, காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் வரும் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது ஜெயித்துள்ள அதே 2 தொகுதிகளை மட்டுமே வழங்க மம்தா பானர்ஜி விரும்புவதாக கூறப்படுகிறது.
இதற்கு காங்கிரஸ் கட்சி உடன்படவில்லை. நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம் என காங்கிரஸ் மாநில தலைவரும் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். இதனால் இருகட்சி தலைவர்கள் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி தனது பேரணியில் பேசுகையில், ‛‛பாஜகவை தனித்து எதிர்த்து போராட எனக்கு உறுதி உள்ளது. ஆனாலும் சீட் பங்கீட்டில் எங்களது வார்த்தையை சிலர் (காங்கிரஸ் தலைவர்கள்) கேட்க விரும்பவில்லை. உங்களால் பாஜகவை எதிர்த்து போராட முடியாவிட்டால் தொகுதியையும் கேட்காதீர்கள்’’ என கூறினார்.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மேற்கு வங்க மாநில எம்பியுமான ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியின் உதவியுடன் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனது சொந்த பலத்தில் எப்படி போட்டியிட வேண்டும் என்பது நன்கு தெரியும். அதேவேளையில் மம்தா பானர்ஜி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆதரவால் தான் அவர் மேற்குவங்கத்தில் அதிகாரத்தில் உள்ளார்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.
நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் ‛இந்தியா’ கூட்டணி உடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications