அரசியல்வாதிகள், கட்சிகளின் ட்விட்டர், இணையதளங்களை வாட்ச் பண்ணும் தேர்தல் ஆணையம்
போபால்: அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் இணையதளங்கள், டிவிட்டர் கணக்குகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின்போது எந்தவிதமான விதி மீறலிலும் இவர்கள் ஈடுபடாத வகையில் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவே இந்தக் கண்காணிப்பாம்.

6 கட்சிகள் கண்காணிப்புப் பட்டியலில்
இந்த முடிவின்படி 6 கட்சிகளை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து அவற்றின் இணையதளங்களைக் கண்காணிக்கவுள்ளதாம்.

பட்டியலில் 18 தலைவர்கள்
அதேபோல 18 அரசியல் தலைவர்களையும் தேர்வு செய்து அவர்களின் இணையதளங்கள், டிவிட்டர் பக்கங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றனர்.

யார் யாரெல்லாம்...
இந்தப் பட்டியலில் சிவராஜ் செளகான், சோனியா காந்தி, திக்விஜய் சிங், உமா பாரதி, நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், ராகுல் காந்தி, அத்வானி, சசி தரூர், நிதின் கத்காரி, ரவி சங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன், ராஜ்நாத் சிங், ராஜீவ் சுக்லா, முக்தர் அப்பாஸ் நக்வி, உமர் அப்துல்லா, அஜய் மேக்கன், எடியூரப்பா ஆகியோர் உள்ளனர்.

எது எதெல்லாம் கண்காணிக்ப்படும்
இந்த அரசியல்வாதிகள், கட்சிகளின் டிவிட் செய்திகள், பத்திரிக்கைகளின் இணையதளங்கள், இ பேப்பர்கள் உள்ளிட்டவை முழுமையாக கண்காணிக்கப்படுமாம்.

உதவிக்கு வரும் புனே சிடாக்
தேர்தல் ஆணையத்தின் இந்த கண்காணிப்புப் பணிக்கு புனேவில் உள்ள சிடாக் நிறுவனம் உதவி செய்யவுள்ளது.

பேஸ்புக் ஓகேப்பா...
அதேசமயம், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் பேஸ்புக்கைக் கண்காணிக்கும் அளவுக்கு அங்கு விதி மீறல் இருப்பதாக தெரியவில்லை என்று தேர்தல் ஆணையம் கருதுவதால் இந்த லிஸ்ட்டில் பேஸ்புக் இடம் பெறவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications