வா.. செல்லம், நாம அங்க போய் கல்யாணம் பண்ணிக்கலாம்...!
டெல்லி: திருமணம்... வழக்கம் போல கல்யாண மண்டபத்தில் நடத்தி, வரிசையாக உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வந்து நின்று கை குலுக்கி விஷ் பண்ணி, பரிசைக் கொடுத்து விட்டு ரெடியாக இருக்கும் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு நடையைக் கட்ட.. போட்டோவுக்கு மாலையும், கையுமாக போஸ் கொடுத்து ஆய்ந்து ஓய்ந்து உட்கார்ந்து.. இது போரடிக்குதன்னு நினைக்கிறீங்களா.. அப்ப உங்க மெனுவை மாத்துங்க...
திருமணம் செய்வதற்காக இப்போதெல்லாம் பலர் விதம் விதமான லொகேஷன்களைத் தேடத் தொடங்கி விட்டனர். வழக்கம் போல கல்யாணம் செய்யாமல் வித்தியாசமாக செய்து பார்க்க விரும்புகிறார்கள் இன்றைய இளம் தலைமுறையினர்.
அப்படிப்பட்டவர்களுக்காக இங்கே சில இடங்களைத் தொகுத்துத் தருகிறோம்.. உங்க செல்லத்துடன் அங்கு போய் திருமணம் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள்..

கோவா ஓ.கேவா..
இந்தியர்களிடம் போய் உங்களுக்குப் பிடிச்ச ஊர் எது என்று கேட்டால் முதல் பெயராக கோவாவைத்தான் சொல்கிறார்கள். அப்படி ஒரு அம்சமான ஸ்பாட்தான் கோவா. இங்கு நிறையப் பேர் திருமணம் செய்யவும், ஹனிமூனைக் கொண்டாடவும் தேர்வு செய்கின்றனர். எனவே இது ஒரு அருமையான லொகேஷன்.

சிம்லா எப்படி
அதேபோல இந்தியர்களுக்குப் பிடித்த இன்னொரு ஊர் சிம்லா. இங்கு சுற்றுலா செல்ல மட்டுமல்லாமல், திருமணம் செய்து கொள்ளவும், அப்படியே ஹனிமூனையும் முடித்துக் கொள்ளவும் பலர் விரும்புகிறார்கள்.

அந்தமான் சரிப்பட்டு வருமா...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஹேவ்லாக் தீவு ஒரு அருமையான இடம். இங்கு நிறையப் பேர் திருமணம் செய்ய விரும்புகிறார்களாம். கல்யாணத்தை முடித்த கையோடு வெள்ளை நிற மணற்பரப்பில் கை கோர்த்தபடி நடந்து எதிர்காலக் கனவில் மூழ்குவது எவ்வளவு ஜாலியாக இருக்கும்...

வெளிநாடுகளில் என்ன இருக்கு...
உள்ளூரில் இதுபோல நிறைய இருக்கிறது. ஆக்ராவில் கூட தாஜ்மஹாலையொட்டி நிறைய ரிசார்ட்கள் இருக்கின்றன.அங்கு கூட பலர் திருமணத்திற்காக வருகிறார்கள். அதேபோல வெளிநாடுகளிலும் பட்ஜெட்டுக்கேற்ப நிறையவே இருக்கிறது.

அல் பஸ்தான் ரொடானா.. துபாய்
இது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல். துபாயில் இருக்கிறது. இங்கு நிறையப் பேர் திருமணம் செய்து கொள்ள வருகிறார்களாம். அருமையான சூழல் இந்த ஹோட்டலி்ல இருப்பதே இதற்குக் காரணம்.

தீவு வேணுமா.. ரசா சயாங் இருக்கே
மலேசியாவன் பினாங்கில் உள்ள ரசா சயாங் ரிசார்ட் மற்றும் ஸ்பா அருமையான ஒரு திருமணத்திற்கேற்ற தீவுத் திடல்... முழுமையாக ஏசி செய்யப்பட்ட ரிசார்ட்டும், அரங்குமும் இணைந்தது இது கிட்டத்தட்ட 30 ஏக்கரில் இது பரவிக் கிடக்கிறது. கடலைப் பார்த்தபடி இருக்கும் இந்த ரிசார்ட்டுக்கு வந்து நிறையப் பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஹனோய் மெட்ரோபோல்
ஹனோயில் உள்ள மெட்ரோபோல் ஹனோய் ஹோட்டலும் ஒரு அருமையான திருமண லொக்கேஷனாகும். அருமையான சூழல் காரணமாக நிறையப் பேர் இங்கு வருகிறார்களாம்.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க..எங்க கல்யாணத்த வச்சுக்கலாம்னு ஏதாவது ஐடியா வரும்!.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications