குலுங்கிய மேற்கு வங்க சட்டசபை.. பாஜக - திரிணாமுல் எம்எல்ஏக்கள் மாறி மாறி தாக்குதல்.. என்ன நடந்தது?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போக்டுய் கிராமத்தில் நடந்த கலவரம் குறித்து இன்று அம்மாநில சட்டசபையில் கடுமையான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து அவையில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
Recommended Video
மேற்கு வங்க மாநிலத்தில் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் கொலை செய்யப்பட்டார். 4 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் பாதுஷேக் கொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணை
இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பாதிக் ஷேக் மற்றும் சோனா ஷேக் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். கடந்த வருடம்தான் பாதுஷேக் சகோதரர் பாபர் ஷேக் இதே கும்பலால் கொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் நண்பர்களாக இவர்கள், பின்னர் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக எதிரிகளாக மாறி, தற்போது மாறி மாறி தாக்கி வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதுஷேக் கொலை
பாதுஷேக் கொலை செய்யப்பட்டது, அதன்பின்பான கலவரம் காரணமாக போக்டுய் கிராமத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அம்மாநில அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. உள்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. கொல்லப்பட்ட பாதுஷேக் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் திரிணாமுல் காண்கிலார்ஸ் கட்சியினரும் இதனால் கொதிப்பில் உள்ளனர்.

மோதல்
இந்த நிலையில் போக்டுய் கிராமத்தில் நடந்த கலவரம் குறித்து இன்று அம்மாநில சட்டசபையில் கடுமையான விவாதம் நடைபெற்றது. பாஜகவினர் அவைக்கு முன்னே வந்து கடுமையான கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் எவ்வளவு சொல்லியும் பாஜகவினர் கேட்கவில்லை. இதையடுத்து பதிலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்து கோஷம் எழுப்பி கடுமையாக விவாதம் செய்தனர். விவாதத்தை தொடர்ந்து அவையில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

கைகலப்பு
இதில் இரண்டு தரப்பு எம்எல்ஏக்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. பெண் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் இரண்டு தரப்பில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் பெரிதான நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கடைசியில் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் சுவேண்டு அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் பீமன் பானர்ஜி மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அமைதியை நிலைநாட்ட தெரியாமல், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மீது மம்தா பானர்ஜி வன்முறையை ஏவி விடுவதாக சுவேண்டு அதிகாரி சட்டசபைக்கு வெளியே காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications