தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மே.வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
கொல்கத்தா: தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேற்கு வங்க மாநில அரசே நீட் நுழைவுத் தேர்வு அறிமுகத்துக்கு முன்னர் நடத்திய பொது நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மாநில சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கும் பெறப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அனைத்து மாநிலங்களும் நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த தீர்மானங்களை கிடப்பில்தான் மத்திய அரசு போட்டு வைத்துள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. நீட் வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம் , நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது என அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமையும் சில ஆயிரம் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையானது.
இதனையடுத்து நாடு முழுவதுமே நீட் தேர்வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரின. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றது.
தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேற்கு வங்க மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications