‛‛நெற்றியில் வழியும் ரத்தம்’’.. மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி.. திரிணாமுல் வெளியிட்ட போட்டோ
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி காயமடைந்தார் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது.

அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். பொதுக்கூட்டங்களை நடத்தி அவரது கட்சி தயாராகி வருகிறது.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி இன்று நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ‛‛நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த போட்டோவில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் வெட்டுக்காயம் உள்ளதால் அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி விசாரித்த நிலையில் மம்தா பானர்ஜி தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி விரைவில் காயத்தில் இருந்து குணமாகி வர வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனையை தொடங்கி உள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் சிலிகுரி பகுதியில் மோசமான காலநிலையால் அவரது ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது. அப்போது மம்தா பானர்ஜி கால் முட்டு மற்றும் இடுப்பில் பிடிப்பு ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று கொண்டார். அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
Our chairperson @MamataOfficial sustained a major injury.
— All India Trinamool Congress (@AITCofficial) March 14, 2024
Please keep her in your prayers 🙏🏻 pic.twitter.com/gqLqWm1HwE
ஜனவரி மாதம் 24ம் தேதி கிழக்கு புர்த்வான் பகுதியில் அவரது கார் விபத்தில் சிக்கியது. அவரது கான்வேயில் நிறைய கார்கள் சென்றன. அப்போது முன்னால் சென்ற கார் திடீரென்று நின்றது. இதனால் மம்தா சென்ற கார் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது மம்தா பானர்ஜியின் லை காரின் முன்பகுதியில் முட்டியது. இதில் அவர் காயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார் .இந்நிலையில் தான் தற்போது அவர் வீட்டில் தவறி விழுந்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications