மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. 7000 வாக்குகள் வித்தியாசம்.. சுவேந்து அதிகாரி முன்னிலை
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேற்று வங்க தேர்தல்
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், பாஜக 100 மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடும் போட்டி
அதேபோல இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். தற்போது வரை திரிணாமுல் 155 இடங்களிலும் பாஜக 87 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மம்தா ஷாக்
இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். முதல் சுற்று முடிவில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சவேந்து அதிகாரி கூடுதலாக 7000 வாக்குகள் பெற்றுள்ளார். இது திரிணாமுல் தொண்டர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவேந்து அதிகாரி
பல ஆண்டுகளாக சவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தவர். மம்தா பானர்ஜியின் வலது கரமாக அறியப்பட்டவர் சவேந்து அதிகாரி. இருப்பினும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கடைசி நேரத்தில், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில்ல இணைந்தார். முன்னதாக, அவர் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்யப்போவதாகச் சவால் விடுத்திருந்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications