மேற்கு வங்கத்தில் அடித்து துக்கிய பாஜக! ஓரங்கட்டப்பட்ட மம்தா பானர்ஜி! மிகப்பெரிய ட்விஸ்ட்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கருத்துக்கணிப்புகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக வந்திருந்ததால் தேர்தல் முடிவு குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.

தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியில், அவர் முன்னணியில் இருக்கிறார். பாஜகவின் சுவேந்து அதிகாரி தான் போட்டியிட்ட தொகுதியான நந்திகிராமில் முன்னிலையில் இருக்கிறார்.
பாஜக 35ல் வெற்றி 170ல் முன்னிலை
திரிணாமுல் காங்கிரஸ் 13ல் வெற்றி 69ல் முன்னிலை
இதரவை 6 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது
களம் எப்படி இருக்கிறது?
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாகவே திரிணாமுல் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. வழக்கமாக நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே இருக்கும். இதை பாஜக சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. எனவே மேற்கு வங்கம் பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ் என மாறியிருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்தான். பொதுவாக இந்த கணிப்புகளில் எந்த அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வரும்? என்பது தெரிந்துவிடும். ஆனால் மேற்கு வங்க தேர்தல் நிலவரம் குறித்து வெளியான கணிப்புகள் மாறுபட்டவையாக இருந்தன. சில கணிப்புகள் பாஜகதான் அதிகாரத்திற்கு வரும் என கூறியிருந்தன. ஒரு சில கணிப்புகள் மம்தாவுக்கு ஆதரவாக இருந்தன.
தேர்தல் சர்ச்சை
ஆனால், இந்தமுறை வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தது கவனம் பெற்றிருக்கிறது. இம்முறை மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத அளவில் 92.93% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2011-ல் பதிவான சாதனையை முறியடித்துள்ளது. தேர்தல் ஆணையம் சுமார் 90 லட்சம் வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது (Special Intensive Revision) மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக வெடித்தது.
நட்சத்திர தொகுதிகள்
பவானிபூர்: முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் சுவேந்து அதிகாரி மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் மோதும் தொகுதி என்பதால் இது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டைமண்ட் ஹார்பர் & ஜாதவ்பூர்: திரிணாமுல்லின் இளம் தலைவர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் தொகுதிகள் ஆகும்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications