அரசு ஊழியர்களுக்கு லீவு ரத்து.. இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் மே.வங்கம் அறிவிப்பு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறைகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான விடுமுறை ஏன் ரத்து செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இந்த போர் பதற்றம் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் நேற்று போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

pakistan india west bengal

வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? எதிரிகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு ராணுவம், போலீஸ், தீயணைப்பு துறைகள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பில் விழிப்புணர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகள் என்பது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அம்மாநில நிதித்துறை அமைச்சகம் சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தற்போது நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த விடுமுறை ரத்து என்பது அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும்வரை நடைமுறையில் இருக்கும். இந்த உத்தரவு என்பது முன்கூட்டியே விடுமுறையில் சென்றவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அதேவேளையில் மருத்துவ விடுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை என்பது பொருந்தாது.

மேலும் ஏதேனும் அவசர நிலை என்றால் சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரியின் அனுமதியுடன் விடுமுறை எடுத்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பயங்கரவாதிகளை கொன்றனர். இதற்கு நம் நாடு நேற்று பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நம் நாடு நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து பாகிஸ்தான் அமைதியாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் லாகூர் உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் நம்மை தாக்கலாம். இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இப்படியான சூழலில் நம் நாட்டில் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அவர்களுக்கு உதவி செய்ய அரசு துறை மற்றும் அதன் ஊழியர்கள் தான் முதலில் வேண்டும். இதனை மனதில் வைத்து தான் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்க அரசு தனது அரசு ஊழியர்களின் விடுமுறையை அதிரடியாக ரத்து செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+