Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேற்கு வங்கம்: சீனியர்கள், புதுமுகங்களுடன் 43 பேர் கொண்ட மமதா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 43 அமைச்சர்கள் பதவியேற்றனர். 43 பேருக்கும் ஆளுநர் ஜகதீப் தங்கார் ஒரே நேரத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்றது. இதனையடுத்து மேற்கு வங்கத்தின் முதல்வராக 3-வது முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.

West Bengal: Mamata Banerjee cabinet to take oath today

மமதா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை இன்று காலை பதவியேற்றது. 43 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஜகதீப் தங்கார் ஒரே நேரத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மமதாவின் அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மமதா அமைச்சரவையில் 2 முறை நிதி அமைச்சராக இருந்தவர் அமித் மித்ரா. தற்போது முடிவடைந்த சட்டசபை தேர்தலில் அமித் மித்ராவின் உடல்நிலையை காரணம் காட்டி அவர் போட்டியிடவில்லை. இருந்தபோதும் அமித் மித்ராவையே நிதி அமைச்சராக்க மமதா விரும்புகிறார். சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து அவரை எம்.எல்.ஏ.வாக்க மமதா திட்டமிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுப்ரதா முகர்ஜி, பார்தா சட்டர்ஜி, ஃபிர்ஹாத் ஹகீம், ஜோதி பிரியா மாலிக், மோலோய் கடாக், அரூப் பிஸ்வாஸ், டாக்டர் ஷாஸி பஞ்சா, ஜாவேத் அகமது கான் ஆகியோர் கேபினட் அமைசர்களாகின்றனர். மேலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஹூமாயூன் கபீர், முன்னாள் பெங்கால் ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டன் மனோஜ் திவாரி, ஷியூலி சுஷா ஆகிய புதுமுகங்களும் கேபினட்டில் இடம்பெறுகின்றனர்.

இவர்களில் 10 பேருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கப்படுகிறது. இன்றைய பதவியேற்பு விழா முடிவடைந்த உடன் முதலாவது அமைச்சரவை கூட்டத்தை மமதா பானர்ஜி நடத்த உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+