நந்திகிராமில் மமதா "திடீர்" தோல்வி.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. பரபர பேட்டி
கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Recommended Video
மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மமதா முதலில் 1200 வாக்குகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டி
இது தொடர்பாக பேட்டி அளித்த மமதா பானர்ஜி, நந்திகிராம் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் நான் மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்பேன். நந்திகிராமை குறித்து கவலைப்பட வேண்டாம். நான் நந்திகிராம் தோல்வி அடைய காரணம் உள்ளது.

தீர்ப்பு
நான் மிகப்பெரிய அமைப்பை எதிர்ப்பு போட்டியிட்டேன். நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு அளிக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கவலை இல்லை.

221 இடங்களில் வெற்றி
நாங்கள் 221 இடங்களில் வெல்கிறோம். பாஜக தேர்தலிலேயே தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் ஆணையம் கடைசியில் முடிவை மாற்றிவிட்டது. நான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின் முடிவை மாற்றிவிட்டது.

கோர்ட்
நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பேன். தேர்தல் ஆணையத்தின் செயல் தவறானது. தேர்தல் ஆணையம் இப்படி செயல்பட கூடாது. தேர்தல் ஆணையத்தின் கொடுமைகளை நாங்கள் எதிர்கொண்டோம். பாஜக தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது.

கீழ்த்தரமான அரசியல்
இப்போது கீழ்த்தரமான அரசியலை அந்த கட்சி செய்கிறது. எங்களுக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கொரோனாவிற்கு எதிராக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முழு கவனத்தை செலுத்துவேன், பதவி ஏற்பு விழா சிறிய அளவில் மட்டுமே நடக்கும், என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications