2 சீட் தானா? பிச்சையா? மோடிக்கு சேவை செய்யும் மமதா..வெளுக்கிறது காங்.- "இந்தியா" கூட்டணி கதி?
கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் மமதாவின் ஆதரவு இல்லாமலேயே காங்கிரஸ் போட்டியிட முடியும் என்றெல்லாம் வெளுத்தெடுத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
"இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. "இந்தியா" கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே இடம் பெற முடியும். இந்த அணியில் இடதுசாரிகள் இணைய வாய்ப்பில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 2 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாகவும் கூறி வருகிறார். இது காங்கிரஸை கடுமையாக கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இது தொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: நாங்கள் ஒன்றும் மமதாவிடம் தொகுதி பிச்சை கேட்கவில்லை. மமதா பானர்ஜியின் கருணை எங்களுக்கு தேவையே இல்லை. எங்களது சொந்த பலத்தில் எங்களால் தேர்தலை சந்திக்கவும் முடியும். உண்மையிலேயே மமதா பானர்ஜி, காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பவே இல்லை. பிரதமர் மோடிக்கு சேவை செய்வதில்தான் அவர் பிஸியாக இருக்கிறார். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பரிந்துரைத்தார். இதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரித்தார். இந்தியா கூட்டணியின் எந்த கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மல்லிகார்ஜூன கார்கே தலித் என்பதால் தனித் தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது மமதாவின் கணக்கு. ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதனை ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதேபோல தொகுதிப் பங்கீட்டை டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார் மமதா. இதனையும் காங்கிரஸ் ஏற்கவில்லை. இந்த நிலையில் மமதா பானர்ஜியை மிக கடுமையாக காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. இத்தகைய நிலைப்பாடுகள் தொடர்ந்தால் "இந்தியா" கூட்டணிக்கு விரைவிலேயே காங்கிரஸ் மூடு விழா காணும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications