மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம்...நெஞ்சை குலைநடுங்க செய்யும் குற்றப்பத்திரிகை!
இம்பால்: நாட்டையே உலுக்கிய மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இனப் பழங்குடிகளிடையே கடந்த ஆண்டு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது வரை ஓயவில்லை. இந்த வன்முறையின் உச்சமாக இரு குக்கி இனப் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மணிப்பூர் சூரசந்த்பூர் மாவடத்தில் குக்கி- ஜோமி பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்த இரண்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் நிர்வாணமாக தெருக்களில் இழுத்து வரப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குக்கி இனப் பழங்குடி பெண்களை முதலில் வன்முறை கும்பல் தாக்கி பலாத்காரம் செய்தது. இதனையடுத்து இரு பெண்களையும் நிர்வாணப்படுத்திய கும்பல் சாலையோரத்தில் இருந்த போலீஸ் வாகனத்தை தங்களது வசமாக்கி அவர்களையும் ஏற்றி இருக்கிறது. ஆனால் போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரோ சாவியை தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த இரு குண்டர்கள், போலீஸ் வாகனத்தில் இருந்து இரு பெண்களையும் கீழே இழுத்து தள்ளிவிட்டுள்ளனர். அங்கிருந்த போலீசார் முன்னிலையில் இத்தகைய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது. இதன் பின்னரே பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளது அந்த வன்முறை கும்பல்.
அப்போது மொத்தம் 7 போலீசார் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு உதவுங்கள் என்று கெஞ்சி இருக்கின்றனர். ஆனாலும் போலீசார் மவுனமாகவே கை கட்டி வேடிக்கைப் பார்த்துள்ளனர். இவ்வாறு போலீஸ் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவாலயங்கள்- வீடுகள் எப்படியெல்லாம் கிராமங்களில் எரிக்கப்பட்டன என்பது குறித்தும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில டிஜிபி ராஜீவ் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் போலீசார் மீது துறை சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள்தான் முடிவெடுப்பர் என்றார்.
மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications