மழை பெய்யுது.. என்ன பண்ணலாம்? கடைசி நொடியில் சிஎஸ்கேவிடம் கேட்கப்பட்ட கேள்வி.. வந்து விழுந்த பதில்
சென்னை: ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியை ரிசர்வ் தினத்திற்கு.. அதாவது இன்று மாற்றுவது தொடர்பாக சிஎஸ்கே அணியிடம் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.
நேற்று நடக்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை. தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் பெய்த் மழை காரணமாக நேற்று மேட்ச் நடக்கவில்லை. இந்த நிலையில் இன்று மேட்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று தொடக்கத்தில் மாலை ஒரு மணி நேரத்திற்கு பின் மழை பெய்யாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 மணி வரை தொடர்ந்து பெய்தது. அதன்பின் மழை விட்டாலும் சிறிது நிமிடத்தில் மீண்டும் சாரல் மழை பெய்தது.
11 மணி வரை பொறுத்து பார்த்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. அதன்படி நேரம் செல்ல செல்ல ஓவர்கள் குறைக்கப்பட்டன.
இரவு 9.45 - ஒரு அணிக்கு 19 ஓவர்கள்.
இரவு 10.30 - ஒரு அணிக்கு 15 ஓவர்கள்.
இரவு 11 மணி - ஒரு அணிக்கு 12 ஓவர்கள்.
இரவு 11.30 - ஒரு அணிக்கு 9 ஓவர்கள்.
11 மணி ஆன போது மழை பெய்கிறது என்ன செய்யலாம் என்று குஜராத், சிஎஸ்கே அணிகளிடம் கேட்டுள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் 12 ஓவர்கள் வரை வைத்தால் ஆடலாம். இல்லையென்றால் ரிசர்வ் நாளில் ஆடுவோம் என்றுள்ளனர்.
குஜராத் அணியும் 12 ஓவர்கள் வரை வைத்தால் ஆடலாம். இல்லையென்றால் ரிசர்வ் நாளில் ஆடுவோம் என்றுள்ளனர். இரண்டு அணியும் இப்படி சொன்னதால் 11 மணிக்கு ஆட்டத்தை ஆட முயன்று உள்ளனர். ஆனால் 11 மணிக்கு வானிலை சரியாகவில்லை.
தொடர்ந்து மழை பெய்தது. அதைவிட குறைவான ஓவர்களில் ஆட சிஎஸ்கே, குஜராத் இரண்டு அணிகளும் விரும்பவில்லை. இதனால் கடைசியில் ஆட்டத்தை ரிசர்வ் டேவான ஒன்று மாற்றலாம் என்று முடிவு எடுத்தனர்.
பைனல்ஸ்: இன்று நடக்கும் இறுதிபோட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. குஜராத் இடையே இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. கடைசியாக குவாலிபயர் சுற்றில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை வீழ்த்தியது.
முன்னதாக இந்த சீஸனின் முதல் போட்டியிலோ குஜராத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. தற்போது அதே குஜராத் மைதானத்தில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இது ஹோம் மைதானம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு பிட்ச் எதிராக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த பிட்ச் குஜராத் அணிக்கு சாதகமான பிட்ச். சென்னை பிட்ச் போல இது ஸ்லோவாக இருக்காது. அதனால் இன்று நடக்கும் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், பத்திரனா, துஷார் தேஷ் பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் ஆட உள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications