சுனந்தா புஷ்கர் கடைசியாக தோழிக்கு போன் செய்து மெஹர் பற்றி கதறல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தனது தோழியும், பிரபல பத்திரிக்கையாளருமான நளினி சிங்கிற்கு கடைசியான போன் செய்து பேசியுள்ளார்.

அப்போது பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹல் தரார் குறித்து கதறி அழுதுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டல் அறையில் கடந்த 17ம் தேதி இரவு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய இரவில் தனது தோழியும், பிரபல பத்திரிக்கையாளருமான நளினி சிங்கிற்கு போன் செய்து பேசியுள்ளார்.

What did Sunanda Pushkar tell Nalini Singh about Mehr Tarar in her last phone call?

இது குறித்து நளினி பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

சுனந்தா தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளருமான மெஹர் தராருக்கும் இடையேயான உறவால் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அதிகாலை 12.10 மணிக்கு அவர் எனக்கு போன் செய்து பேசினார். அப்போது அவர் தரூரும், மெஹரும் இமெயில் மற்றும் பிளாக்பெர்ரி மூலம் தகவல் பரிமாறிக் கொண்டதை அழுது கொண்டே தெரிவித்தார்.

சுனந்தா இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பு அவர் கடைசியாக என்னுடன் தான் பேசினார். நாங்கள் பேசிய விவரங்களை போலீசில் தெரிவிக்க தயாராக உள்ளேன் என்றார்.

முன்னதாக சுனந்தா தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தராருக்கும் இடையேயான உறவை ட்விட்டரில் அம்பலப்படுத்தினார். இதையடுத்து தான் அவர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+