Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாரிசு அரசியலா? அமித்ஷா, ராஜ்நாத் மகன் செய்வது என்ன? சொல்லுங்க.. சொல்லுங்க..ராகுல் "பாட்ஷா" அட்டாக்

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: வாரிசு அரசியல் பற்றி பேசும் பாஜகவின் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மகன்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என சொல்வார்களா? என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் வெறுப்பு சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவதற்காக கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தேன். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் இந்திய ஒற்றுமைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.

What does BJP Minister Amit Shah, Rajnath’s son do? ask Rahul Gandhi

அச்சப்படும் இந்தியா அல்ல: எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத நடைமுறைகள் உள்ளன. எங்களைப் பொறுத்தவரை, இவை இந்தியா என்ற எண்ணத்தின் அடித்தளம். மக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், அவர்களின் மொழியைப் பேசுவதற்கும் அல்லது அவர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதற்கும் அச்சப்படும் இந்தியா, நாம் விரும்பும் இந்தியா அல்ல.பாஜகவின் சித்தாந்தம் என்ன செய்ய முடியும் என்பதற்கு மணிப்பூரில் நடப்பது மிகப்பெரிய உதாரணம்.

வெற்றிகரமான திட்டங்கள்: ஆட்சியில் திட்டங்களை சோதிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு திட்டம் வெற்றியாக செயல்பட்டால், அதை மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவோம். உதாரணமாக, ராஜஸ்தானில் எங்கள் சுகாதாரத் திட்டங்கள், கர்நாடகாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சத்தீஸ்கரில் கிசான் சார்பு கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த பயனுள்ள திட்டங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதே எங்கள் குறிக்கோள்.

மிசோரம் வாக்குறுதி: மிசோரமுக்கான தொலைநோக்கு பார்வையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், முதியோர் ஓய்வூதியம் ரூ. மாதம் 2000 வழங்கப்படும்; எரிவாயு சிலிண்டர் ரூ. 750க்கு வழங்குவோம்; தொழில்முனைவோருக்கு பொருளாதார வலுவூட்டல் திட்டங்களை வழங்குவோம்; மிசோரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்துவோம். மிசோரம் மாநிலத்தில் முழுமையான வளர்ச்சியை வழங்குவதே எங்கள் நோக்கம்.

வாரிசு அரசியல்: வாரிசு அரசியல் பற்றி பேசுகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் செய்கிறார்? ராஜ்நாத் சிங் அவர்களின் மகன் என்ன செய்கிறார்? நான் இதை உங்களிடம் கேள்வியாய் கேட்கிறேன். நீங்கள் வாரிசு அரசியல் குறித்து பேசுகிறீர்கள். கடைசியாக நான் கேள்வி பட்டது அமித்ஷா மகன்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார் என்று. எனவே கேள்விகளை சரியாக கேளுங்கள். பாஜக தலைவர்களை பார்த்து அவர்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

பாஜகவை வீழ்த்துவோம்: கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்தோம். தெலுங்கானாவில் பாஜகவை தோற்கடிப்போம். மத்திய பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிப்போம். சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம். கடந்த முறை ராஜஸ்தானில் பாஜகவை தோற்கடித்தோம், இந்த முறை மீண்டும் தோற்கடிப்போம். வடக்கு கிழக்கிலும் அவ்வாறே சாதிப்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+