Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வர்.. டக்குனு கிட்ட வந்த பாதுகாப்பு படை வீரர்கள்! ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது குஜராத்திற்குச் சென்றுள்ள நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

குஜராத்தில் பல ஆண்டுகளாகவே பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. இப்போது அங்கு பூபேந்திர படேல் முதல்வராக உள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் அங்குத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக களமிறங்கி உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இதைக் கவுரவ பிரச்சினையாகவும் பாஜக பார்க்கிறது.

 குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

இன்னும் சில நாட்களில் குஜராத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவே வாய்ப்புகள் அதிகம். அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்தாலும் கூட இடையில் ஆம் ஆத்மியும் இந்த முறை களம் காண்கிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாகப் பல முறை அங்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசியும் பல திட்டங்களைத் தொடங்கி வைத்தும் வருகிறார்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் தான் குஜராத்திற்குச் சென்று, பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து இருந்தார். அப்போது மக்கள் காட்டிய வரவேற்பு என்பது தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இது இருப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கடுமையாகச் சாடி வருகின்றனர்.

வீடியோ

வீடியோ

அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியின் காரில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஏற முயல்கிறார். இருப்பினும், அருகே இருந்த பாதுகாப்புப் படை வீரர் அவரை ஏற அனுமதிக்கவில்லை. அப்போது உடனே காரும் அங்கிருந்து புறப்படுகிறது. இதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் காருடனேயே கொஞ்ச நேரம் செல்வது போல அந்த வீடியோ இருக்கிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது

சாடல்

சாடல்

ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து பிரதமரை விமர்சித்து வருகின்றனர். டிஆர்எஸ் கட்சியின் ஓய்எஸ்ஆர் ரெட்டி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வருக்கு என்ன நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். பாஜக முதல்வரையே மோடி இப்படித்தான் நடத்துகிறார் என்றால் சாமானியர்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல ஆம் ஆத்மி கட்சியும் இதை விமர்சித்து உள்ளது.

 பாஜக ஆதரவாளர்கள்

பாஜக ஆதரவாளர்கள்

அதேநேரம் இதற்கு பாஜக ஆதரவாளர்களும் விளக்கம் அளித்து உள்ளனர். அதாவது பிரதமரின் பயணத் திட்டம் என்பது பாதுகாப்பு கருதி பக்காவாக திட்டமிட்ட ஒன்றாகவே இருக்கும் என்றும் இது எதிர்பாராத வகையில் நடந்த விஷயம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்புப் படை வீரர் தான் தடுத்து நிறுத்தி உள்ளார் என்றும் இது பிரதமருக்குத் தெரியாமல் கூட இருந்து இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

 குஜராத்

குஜராத்

குஜராத்தில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அங்கு இதற்கு முன்பு சில ஆண்டுகள் விஜய் ரூபானி முதல்வராக இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்தாண்டு விஜய் ரூபானி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பூபேந்திர படேல் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+