கட் ஆன போன்! வெளியே வந்த வயர்! ரயில் விபத்தின் போது நடந்தது என்ன? உயிர் தப்பிய தமிழர் பரபரப்பு தகவல்
புவேனஸ்வர்: ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது குறித்து கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர் நபர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.
மாறாக ஒரு ரயில் தடம் புரண்டதால் இன்னொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 90 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு நோக்கி வரும் ரயில் என்பதால் இதில் பல தமிழர்கள் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் ஒடிசா நோக்கி தமிழக அதிகாரிகள் குழு விரைந்துள்ளனர். அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழக அதிகாரிகள் குழு ஒடிசாவுக்கு விரைந்து உள்ளது. ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். இதனால் பலி எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வார்கள்.
இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தந்தி டிவிக்கு ஆலங்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பேட்டி அளித்துள்ளார். இவர் அதே ரயிலில் பயணம் செய்தவர்.
லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அவர் அளித்த பேட்டியில், நான் ஏசி 2 டயரில் இருந்தேன். டமார் என்று சத்தம் கேட்டது. திடீரென ரயில் தடம் புரண்டது. உள்ளே இருக்கும் ஏசி வயர்கள் எல்லாம் வெளியே வந்து அறுந்து விழுந்து கிடந்தது என்று கூறி உள்ளார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.,
விபத்து நடந்தது எப்படி? : அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
இதே பாதையில் வந்த இன்னொரு சரக்கு ரயிலும் அடுத்த சில நிமிடங்களில் பின்னால் மோதி தடம் புரண்டு உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications