பாஜகவுக்கே அதிர்ச்சி கொடுத்தது இந்த ஹரியானா தான்.. கடைசி தேர்தலில் அதிக சீட் வென்றது யார்!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்திற்கு இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலில் என்ன நடந்தது.. அங்கே இப்போது இருக்கும் அரசியல் சூழல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஹரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில் காஷ்மீரில் மொத்தம் 3 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மறுபுறம், ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஹரியானா: இதில் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. அங்கே ஒரு கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 46 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 2019ம் ஆண்டில் ஹரியானாவில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. 2019 அக். 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அக். 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
தேர்தல் முடிவுகள்: அங்கே மொத்தமுள்ள 36.7% வாக்குகளைப் பெற்ற பாஜக 40 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 28.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், 31 இடங்களைக் கைப்பற்றியது. அதேபோல அங்குள்ள ஜனநாயக ஜனதா கட்சி 14.9% வாக்குகளைப் பெற்று 10 இடங்களிலும் வென்றன. ஹரியானா லோகித் கட்சி (0.56%) மற்றும் இந்தியத் தேசிய லோக் தளம் (21.67%) தலா ஒரு இடங்களில் வென்றன. இது தவிரச் சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றன.
பாஜக ஷாக்: அதைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், கடந்த மார்ச் மாதம் இந்த கூட்டணி முறிந்தது. பாஜக ஆட்சியை கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி மனோகர் லால் கட்டார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில் புதிய முதல்வராக பாஜகவின் நயாப் சிங் சைனி பதவியேற்றார். ஹரியானா லோகித் கட்சி மற்றும் சுயேச்சைகள் இப்போது அரசில் அங்கம் வகிக்கிறது.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தலுக்கு சில காலம் முன்பு தான் அங்கே இந்த அரசியல் குழப்பங்கள் எல்லாம் நடந்தது. மொத்தம் 10 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா லோக்சபா தேர்தலுக்குக் கடந்த மே 25ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இதில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில், 46.3% வாக்குகளைப் பெற்று 5 இடங்களில் வென்றது. மறுபுறம் ஆம் ஆத்மி கூட்டணியுடன் போட்டியிட்ட காங்கிரஸ் 43.8% வாக்குகளுடன் 5 இடங்களில் வென்றது. ஆம் ஆத்மி போட்டியிட்ட ஒரு இடத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தான் இந்த முறை ஹரியானா சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. இது தவிர இந்தியத் தேசிய லோக் தளம் கட்சியானது பகுஜுன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications