"அத்திபட்டி போல.." புதையும் ஜோஷிமத்! மண்ணுக்குக் கீழ் என்ன நடக்கிறது! குழம்பும் வல்லுநர்கள்! பரபர
டேராடூன்: உத்தரகண்ட் ஜோஷிமத் நகரம் திடீரென புதையத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதனிடையே அங்கு நிலைமையை ஆய்வு செய்த வல்லுநர் குழு தங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன.
உத்தரகண்டில் இமயமலைக்கு மிக அருகே அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தான் ஜோஷிமத். இமயமலை ஏற வருவபர்களுக்கும் சரி, ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் சரி இந்த ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாகவே இருக்கும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ச்சியாக இருக்கும் என்பதால்.. அங்குச் சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஜோஷிமத்திற்கு படையெடுத்து வந்தனர். ஆனால், இதுவே அந்த நகரை மிகப் பெரிய பிரச்சினையில் தள்ளிவிட்டது.

ஜோஷிமத்
இமயமலையில் சுமார் 1890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் நகருக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ஹோட்டல்கள், கடைகள் அங்கு காளான் போல முளைத்துள்ளன. இதில் பல விடுதிகளுக்கு முறையான அனுமதி எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. திட்டமிடப்படாத மற்றும் கண்மூடித்தனமான வளர்ச்சியே இப்போது இந்த ஜோஷிமத் நகரை ஆபத்தில் தள்ளியுள்ளது.

புதையும் நகர்
இந்த ஜோஷிமத் நகர் இப்போது திடீரென புதையத் தொடங்கியுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கின. சமீபத்தில் அங்கிருந்த கோயில் ஒன்று அப்படியே சரிந்தது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் கோயிலுக்கு உள்ளே யாரும் இல்லை என்பதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தங்க அரசே வாடகை அளிக்கும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், ஜோஷிமத் புதைவது தொடர்பாக ஆராய வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்தார்.

வல்லுநர் குழு
பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ரஞ்சித் சின்ஹா தலைமையில் எட்டு பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இது ஜனவரி 5-6 தேதிகளில் ஜோஷிமத்தின் கள ஆய்வை நடத்தியது.. இவர்கள் இப்போது தங்கள் பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளனர். அதிகபட்ச சேதம் உள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என்றும் அங்கேயே வசிக்கத் தகுதியான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மக்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

மோசமான பாதிப்பு
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜோஷிமத் நகரில் குறைந்தபட்சம் 25% பரப்பளவு.. பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டிடங்களில் எந்தளவுக்கு மோசமான சேதம் ஏற்பட்டுள்ளன என்பதைக் கண்டறியும் ஆய்வு தற்போது நடந்து வருகிறது. கடுமையான, மிதமான மற்றும் சிறிய தேசம் என்று கட்டிடங்களை வகைப்படுத்தி வருகிறோம்" என்றார். மேலும், அங்குள்ள சுனில், மனோகர் பாக், சிங்தார் மற்றும் மார்வாரி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆய்வுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ரொம்பவே மோசமான ஒன்றாக மாறியுள்ளது.

பரபர காரணம்
வல்லுநர் குழுவின் அந்த அறிக்கையில், "நீர் ஓட்டமும் மோசமான விரிசல்கள் ஏற்படும் இடங்களும் ஒத்துப்போகின்றன. ஜேபி காலனியிலிருந்து மார்வாரி வரையிலான நீர் ஓட்டம்., நிலத்திற்கு அடியே வெற்றிடத்தை உருவாக்கியிருக்கலாம். இதன் காரணமாக ஜேபி காலனிக்கு சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணில் புதையத் தொடங்கின.அங்குப் பல பெரிய விரிசல்களை உள்ளன. ஒரு மீட்டர் ஆழமாகக் கூட விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.. இதன் காரணமாகக் கட்டிடங்களின் தடுப்புச் சுவர்கள் மற்றும் தரைதளங்கள் பழுதடைந்து, விரிசல்கள் ஏற்படுகின்றன... அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து வருகிறோம்.. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் பாதிப்பு
அங்குப் பாதிப்புகள் ரொம்பவே வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தேசம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் புலம்புகின்றனர். மேலும், அரசு தங்களுக்கு நிரந்த தீர்வை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம், சுரங்க பணிகள் காரணமாகத் தொடர்ந்து பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்படுவதாகவும் இதுவே நகரம் புதையக் காரணம் என்றும் உள்ளூர் மக்கள் சாடுகின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications