1 ஜிபி ஸ்பீடுடன் ஜிகா பைபர்.. அல்ட்ரா வசதிகளுடன் செட்ஆப் பாக்ஸ்.. வாவ் சொல்ல வைக்கும் ஜியோ ஆஃபர்
Recommended Video

மும்பை: ஜியோ ஜிகா பைபர் என்ற புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், இந்திய இணையதள சேவை துறையில் பெரும் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளது ரிலையன்ஸ்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோதுதான், சேர்மன் முகேஷ் அம்பானியால், இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்போது கேபிள் டிவி, இணையதளம் என பல வகைகளில் பயன்படுத்தப்படும் சேவையை இது ஒன்றாக்கிவிடும். மேலும், அதிவிரைவு மற்றும் அதிக துல்லிய இணையதள சேவை, தொலைக்காட்சி சேவையை மக்கள் பெற முடியும்.

வீட்டுக்கு வீடு
ஜிகா ஃபைபர் டூ தி ஹோம் (FTTH), பிராட் பேண்ட் வசதி என்பது பைபர் இணைப்பை வீட்டுக்குள்ளும் கொண்டுவர கூடியது. இப்போது, முக்கிய பில்டிங் வரை மட்டுமே பைபர் கேபிள்கள் இணைப்பு கொடுக்கப்படுகின்றன. வீடுகளுக்குள் காப்பர் வயர்கள் மூலம் இணையதள சேவை கொண்டுவரப்படுவதால் அவற்றின் வேகம் குறைகிறது. ரிலையன்ஸ் ஜிகா ஃபைபர் திட்டத்தால் துல்லியமான 4கே வீடியோக்களை, டிவியில் கண்டு ரசிக்க முடியும். ஏனெனில் இணையதளத்தின் வேகம் என்பது 1 Gbp என்ற அளவில் அதிவேகமானதாக இருக்கும்.

இலவசமாக சேனல்கள்
அதிவேக இணையதள சேவையுடன் ஜிகா டிவி செட்ஆப் பாக்சும் வழங்கப்படும். இதன் மூலம் 600க்கும் அதிக சேனல்களை துல்லிய தரத்தோடு கண்டு ரசிக்க முடியும். இப்போது ஜியோ டிவி ஆப் மூலம், செல்போனில் கட்டண சேனல்களை கூட இலவசமாக பார்க்க முடிகிறது. பலரும் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை இந்த ஆப் மூலம் ரசிக்கிறார்கள். இனிமேல் அதை டிவிகளில் 4கே துல்லியத்தன்மையோடு கண்டு ரசிக்க முடியும். மேலும், வாய்ஸ் கமெண்ட் வசதியும் தரப்பட்டுள்ளது. டிவி நமது வாய்ஸ் கமெண்ட் படி செயல்படும். பல்வேறு இந்திய மொழிகளிலும் கூட இப்படி வாய் வழி உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோலிடம் கமாண்ட் செய்தாலே போதும் டிவி செயல்படும்.

போன் செய்யலாம்
ஜிகா டிவி மூலம், பிற டிவிகள், போன்கள், டேப்ளெட்டுகளுக்கு போன் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும் பல நபர்களிடம் இந்த டிவியில் ஒரே நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும். நேரில் நிற்பதை போன்ற தோற்றத்தை வழங்கும், virtual reality வசதியையும் ஜிகா டிவி செட்ஆப் பாக்ஸ் மூலம் ரிலையன்ஸ் வழங்கும். சிசிடிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களையும், ஜியோ ஆப் மூலம் கட்டுப்படுத்த வசதிகள் செய்யப்படுகின்றன.

ஆகஸ்ட் 15ம் தேதி ஆரம்பம்
முதல்கட்டமாக ஜிகா ஃபைபர் டூ தி ஹோம் சேவை 1000 இல்லங்களில் சோதனை அடிப்படையில் பரிசோதித்து பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினம் முதல், இச்சேவை 1100 நகரங்களுக்கு ஒரே நேரத்தில் விரிவடைகிறது. MyJio app அல்லது Jio.com மூலமாக இந்த சேவையை பெற விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications