For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளுக்காக உழைப்பேன்.. என்ன நடக்கிறது என்று பாருங்கள்.. மாணிக் சர்க்காரின் அடுத்த திட்டம்

மாணிக் சர்க்கார் இனி என்ன செய்ய போகிறேன் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார் .

By Shyamsundar
Google Oneindia Tamil News

கவுகாத்தி: மாணிக் சர்க்கார் இனி என்ன செய்ய போகிறேன் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் தேர்தல் தோல்வி குறித்தும் அவர் பேசியுள்ளார்.

திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இது அந்த கட்சிக்கு பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. பாஜக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர்

முதல்வர்

இதில் பாஜக மொத்தம் 43 இடங்களில் வென்று இருக்கிறது. இடதுசாரிகள் 16 இடங்களில் வென்று இருக்கிறார்கள். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதன் மூலம் இந்தியாவின் ஏழை முதல்வர் தனது பதவியை இழந்து இருக்கிறார்.

சொல்லப்போவது இல்லை

சொல்லப்போவது இல்லை

அவரிடம் வாக்களிக்கும் எந்திரத்தில் குளறுபடி நடந்தது என்று எழுந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் பாஜக கட்சியின் பண பலம் வேலை செய்துவிட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இனி பாருங்கள்

இனி பாருங்கள்

மேலும் ''இப்போதுதான் தேர்தல் முடிந்து இருக்கிறது. இனிதான் அவர்களின் ஆட்சி, எப்படி செயல்படுகிறார்கள் என்று தெரியும். எல்லோரும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று'' என குறிப்பிட்டு இருக்கிறார்.

திட்டம்

திட்டம்

மேலும் அவர் தனது எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார். அதில் ''ஏழைகளுக்காக தொடர்ந்து உழைப்பேன். இந்த தோல்வி காரணமாக என் பணியை விட்டுக்கொடுக்க மாட்டேன். தொடர்ந்து திரிபுராவில் இருக்கும் ஏழை மக்களை உயர்த்துவதே என்னுடைய நோக்கம். அதை திறம்பட செய்வேன். இந்த தோல்வி என்னை முடக்கிவிடாது'' என்றுள்ளார்.

English summary
Modi Sarkar in Tripura. Manik sarkar's 20 years ruling comes to end. BJP is going to rule in Tripura.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X