டிச.30ல் திறப்பு.. அயோத்தி புதிய விமான நிலையத்தின் பெயர் என்ன தெரியுமா? அட இது லிஸ்ட்லயே இல்லையே
அயோத்தி: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையமத்தை டிசம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் விமான நிலையத்துக்கு சூட்டப்படும் பெயர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கு ராமர் சிலையை கோவில் கருவறைக்கு எடுத்து வர உள்ளார்.
இந்த விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள், சாமியார்கள், மடாதிபதிகள் பங்கேற்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு இனி வரும் காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அயோத்தி ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியில் புதிய விமானம் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 821 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 65,000 சதுர அடியில் விமான முனையம் கட்டப்பட்டுள்ளது. விமானங்களின் ஓடுபாதை 2,200 மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் விமான நிலையத்துக்கு மத்திய அரசு சார்பில் ‛மகரிஷி வால்மிகி சர்வதேச விமான நிலையம் அயோத்திதாம்' என்ற பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்மிகி என்பது ராமாயணத்தை எழுதினார். இவரது ராமாயணம் தற்போது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வால்மிகிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பெயர் விமான நிலையத்துக்கு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய விமான நிலையம் டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டாலும் கூட விமான சேவை என்பது 2024 ஜனவரி 2024ல் தான் தொடங்க உள்ளது. அன்றைய தினம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க உள்ளது. அதன்பிறகு விமான சேவை சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications