நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? எப்படி நடக்கும்?
Recommended Video

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த பேச்சு நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன, அது எப்படி நடைபெறுகிறது என்பது குறித்த ஒரு பார்வை இதோ:

நம்பிக்கையில்லா தீர்மானத்தை யார் கொண்டுவரலாம்?
ஒரு அரசு பதவியில் இருக்க வேண்டுமானால், லோக்சபாவில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை அது கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என எந்த ஒரு உறுப்பினருக்கு சந்தேகம் வந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். இதற்காக காரணம் தெரிவிக்க அவசியம் இல்லை. சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றால் வாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு.

நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்கே கொண்டுவர முடியும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டது லோக்சபா. எனவே அங்கு மட்டுமே, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். ராஜ்யசபாவில் கொண்டுவர முடியாது. லோக்சபா விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எப்படி கொண்டுவர வேண்டும்?
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது பற்றி காலை 10 மணிக்கு முன்பாக சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அதை சபையில் சபாநாயகர் வாசித்து காட்டுவார். குறைந்தபட்சம் 50 எம்.பிக்களாவது ஆதரவு இருந்தால்தான், நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தகுதி பெறும்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் முடிவு என்ன?
நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் ஒருநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முன்னதாக தீர்மானத்தின் மீது, விவாதம் நடைபெறும். ஒருவேளை அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், உடனடியாக ஆட்சி ராஜினாமா செய்யப்பட வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications