முதுகில் குத்தியதால் கோபம்.. கூட்டணி வைக்க நிதிஷ் குமாருக்கு பாஜக போட்ட கண்டிஷன்! ஆடிப்போன ஜேடியூ
பாட்னா: ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் தனது பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் இணைய நிதிஷ் குமாருக்கு அக்கட்சி மேலிடம் முக்கிய கண்டிஷன் போட்டுள்ளதாகவும், அதன் கேட்டு ஜேடியூ கட்சியே ஆடிப்போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
பீகாரில் கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது. பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைந்தன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

பீகாரை பொறுத்தமட்டில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபையே அமைந்தது.
அந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதற்கு அடுத்தப்படியாக பாஜக 74 தொகுதிகளை கைப்பற்றியது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்றது. இருப்பினும் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வரானர்.
ஆனால் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை காலி செய்ய பாஜக திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து 2022ல் வெளியேறி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதல்வரானார். இது பாஜகவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. மேலும் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிதிஷ் குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கினார்.
ஆனால் ‛இந்தியா' கூட்டணியில் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. அவர் தன்னை பிரதமர் வேட்பாளராகவும், ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்க விரும்பினார். ஆனால் பிற எதிர்க்கட்சிகள் அதனை செய்யவில்லை. மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நிதிஷ் குமார் மீண்டும் தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் முக்கிய கண்டிஷனை பாஜக மேலிடம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாஜக கூட்டணி வைக்க முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பிறகு பாஜக சார்பில் ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அவருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் நிதிஷ் குமாருக்கு மத்தியில் புதிய பதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் மத்தியில் அமையும் பாஜக ஆட்சியில் நிதிஷ் குமாருக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற இந்த கண்டிஷனால் நிதிஷ் குமார் தரப்பு ஆடிப்போய் உள்ளதாம்.
மேலும் பாஜகவின் இந்த கண்டிஷனுக்கு அவர் ஒப்புக்கொள்வாரா? என்பது தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நிதிஷ் குமார் பீகார் மாநில சட்டசபையை மொத்தமாக கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறாராம். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் நிதிஷ் குமார் விவாதித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications