ஜாமீனில் வெளியே வந்த பிறகு ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியாது?
டெல்லி: உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சில வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாவது:
தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் மட்டுமே பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்வராகவோ முடியாது.

அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது.
அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியும்.
தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும். கட்சி கூட்டங்களை தலைமையேற்று நடத்த முடியும்.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவருடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவும் பொறுப்புகளில் உள்ளதாலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களையும் அழைத்து கட்சித்தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் நடத்த எந்தத் தடையும் இல்லை.
அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களுக்காகவோ அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும்.
கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications