ஜெ. வழக்கில் மே 12-க்குள் தீர்ப்பா அல்லது மறு விசாரணையா? 3 நீதிபதிகள் பெஞ்ச் கையில் 'க்ளைமாக்ஸ்'!!
டெல்லி: ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பை 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டால் மே 12-ந் தேதிக்கு முன்னதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க மே 12-ந் தேதி வரை கால அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

அதாவது ஜெயலலிதா கோரியபடி ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுவிட்டது. கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கோரியபடி தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டுவிட்டது.
- தற்போதைய நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு மட்டுமே வர வேண்டியுள்ளது.
- பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் லோகூர் மற்றும் நீதிபதி பானுமதி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் 3 பேர் கொண்ட இந்த பெரிய பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
- இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் வரும் 21-ந் தேதியன்று விசாரணையை நடத்த உள்ளது.
- இன்னமும் இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் நியமிக்கப்படவில்லை.
- அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்ற நீதிபதி பானுமதி கருத்தை 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டால் மே 12-ந் தேதிக்கு முன்னரே நீதிபதி குமாரசாமி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை அளிக்கலாம்..
- அதே நேரத்தில் பவானிசிங் ஆஜரானதே சட்டவிரோதம்; மேல்முறையீட்டு விசாரணையே முறையாக நடக்கவில்லை என்ற நீதிபதி லோகூரின் கருத்தை 3 நீதிபதிகள் ஏற்றுக் கொண்டால் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முழுவதுமாக மீண்டும் நடத்தப்பட வேண்டும். அப்படியெனில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க மேலும் 3 அல்லது 4 மாதம் காலமாகும்..
- ஜெயலலிதா வழக்கின் அடுத்த கட்டம் இனி 3 நீதிபதிகள் பெஞ்ச் கையில் மட்டும்தான் இருக்கிறது....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications