உத்தரகாண்ட்: ரிசார்ட், சட்ட ஆலோசனை என பில்ட்-அப் கொடுத்த காங்கிரஸ்.. கடைசியில் பார்த்தால் படுதோல்வி!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது வரை வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள், காங். தலைவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சாடி உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் இரு கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப வெளியான பெரும்பாலான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளிலும் தொங்கு சட்டசபை அமையவே அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

காங். நம்பிக்கை
அதேநேரம் இந்த முறை தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகவே இருந்தது. எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைப்போம் என்று நம்பியது உத்தரகண்ட் காங்கிரஸ் தலைமை! கடந்த சில நாட்களாக உத்தரகண்ட் காங்கிரஸ் வேட்பாளர்களின் பேச்சைக் கவனிப்போருக்கு இது தெளிவாகத் தெரிந்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் பிளான்
பெரும்பான்மை கிடைக்காமல், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் பக்காவாக திட்டம் போட்டு இருந்து காங்கிரஸ். பாஜக குதிரை பேரம் நடத்தும் எனக் குற்றஞ்சாட்டிய உத்தரகண்ட் காங்கிரஸ் தலைமை, தனது வேட்பாளர்கள் அனைவரையும் ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஆளுநர் சந்தித்து ஆட்சி அமைக்கவும் கூட திட்டமிட்டிருந்தது.

காங். எதிர்பார்ப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 2 முறை முதல்வர்களை மாற்றியது பாஜக. முதலில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு தீரத் சிங் ராவத் முதல்வராகக் கொண்டு வரப்பட்டார். அவரது செயல்பாடுகளும் அதிருப்தியை ஏற்படுத்தவே கடந்த 2021 ஜூலை மாதம் புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் முதல்வரா நியமிக்கப்பட்டார். இது பாஜகவுக்குப் பின்னடைவைத் தரும் என்று நம்பியது காங்கிரஸ்! கொரோனா பரவல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சூழல் உள்ளிட்டவையும் தனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது.

சிறப்பு குழுக்கள்
மேலும், தேர்தலுக்குப் பின் விரைவாக முடிவுகளை எடுக்க ஏதுவாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா உள்ளிட்டோர் டேராடூனில் முகாமிட்டிருந்தனர். அதேபோல உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பிரசாரக் குழு பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் டேராடூன் சென்றார். அவர், காங்கிரஸ் பார்வையாளர் குழுவுடன் இணைந்து, நிலைமையைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளார். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடும் வகையில் காங்கிரஸ் தனது சட்டக் குழுவையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

தேர்தல் களம்
ஆனால், தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புகளைச் சுக்கு நூறாக நொறுக்கி உள்ளது. உத்தரகண்ட்டில் மொத்தம் 70 இடங்கள் உள்ள நிலையில், அதில் 41 இடங்களில் இப்போது பாஜக முன்னிலையில் உள்ளது. அதீத நம்பிக்கையில் இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 25 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதே டிரெண்ட் தொடரும் பட்சத்தில், பாஜக உத்தரகண்ட் மாநிலத்தைத் தக்க வைக்கும்.

கண்டறிய முடியவில்லை
இந்தத் தேர்தல் முடிவுகள் உத்தரகண்ட் மக்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இதைத் தாண்டி மற்றொரு முக்கிய விஷயத்தையும் இது உணர்த்துகிறது. உத்தரகண்ட்டில் களத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களாலும் கூட தேர்தல் களத்தையும் மக்களின் எண்ண ஓட்டத்தையும் கண்டறிய முடியவில்லை என்பதே காட்டுகிறது. இதற்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங். உள்ளது.
Recommended Video

அந்நியமான காங்கிரஸ்?
ஏற்கனவே, காங்கிரஸ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டதாகவும் அக்கட்சியின் தலைவர்கள் மக்களுடன் தொடர்பில் இருப்பதில் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் சூழலில், உத்தரகண்ட் தேர்தலில் நடக்கும் இவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணிகளாலே உத்தரகண்ட் மாநிலத்தில் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த காங்கிரசுக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications