17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை... தமிழக அரசியலில் புயல் வீசுமா?
தகுதிநீக்க வழக்கு: 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
Recommended Video

டெல்லி: தகுதி நீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கின் விசாரணையால் தமிழக அரசியலில் புயல் வீசுமா என்பது இன்று தெரிந்துவிடும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இரு வேறு தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 16-ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வும் அளித்தனர். அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

3ஆவது நீதிபதியிடம் செல்லும் வழக்கு
அப்போது சுந்தர் கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

தகுதிநீக்க வழக்கு
தகுதிநீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விமலாவிடம் சென்றுள்ளது. இந்நிலையில் மாறுபட்ட தீர்ப்பாலும் 18 தொகுதிகள் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த கோரியும் தங்கதமிழ் செல்வன் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்றார்.

அப்பீல்
தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி தங்கதமிழ் செல்வனை தவிர மீதமுள்ள 17 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், அருண் மிஸ்ரா ஆகியோர் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

புயலை வீசுமா?
இன்றைய வழக்கு விசாரணையின் ஒவ்வொரு அம்சமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் தமிழக அரசியலில் வீசப்போகும் புயலுக்கு அச்சாரம் போடுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications