அட்மின்களுக்கு புதிய அதிகாரம்.. ஐஐயோ அம்மம்மா வாட்ஸ் ஆப் அப்டேட்!
இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் அப்டேட்டில் குருப் அட்மின்களுக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் அப்டேட்டில் குரூப் அட்மின்களுக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட இருக்கிறது. குரூப்பில் இருக்கும் நபர்களின் செயல்பாட்டை அட்மீன்கள் இனி எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
ஏற்கனவே வாட்ஸ் ஆப் அப்டேட்டில் இன்னும் நிறைய வசதிகள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. யூ டியூப் பார்க்கும் வசதி, குரூப் வீடியோ கால் வசதி என நிறைய வசதிகள் சேர்க்கப்பட இருக்கிறது.
இந்த புதிய குரூப் அட்மின் வசதி நிறைய பிரச்சனைகளை கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அப்டேட்
வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் புதிய அப்டேட் ஒன்றை இன்னும் சில நாளில் வெளியிட உள்ளது. அதன்படி வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்களுக்கு நிறைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குருப்பில் யார் மெசேஜ் அனுப்ப முடியும், யார் அனுப்ப கூடாது என்பதை அட்மின்கள் முடிவு செய்ய முடியும். ஒருவர் குருப்பில் மெம்பராக இருந்தாலும் கூட அவரை மெசேஜ் செய்ய விடாமல் குருப் அட்மின் கட்டுப்படுத்த முடியும்.

என்ன செய்ய முடியும்
இந்த அப்டேட் மூலம் அட்மின்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மேலும் ஒரு குருப்பில் இருக்கும் அனைத்து நபர்களும் மெசேஜ் அனுப்ப முடியாத அளவிற்கு அட்மின்கள் செட்டிங்க்ஸை மாற்ற முடியும். அதேபோல் ஒவ்வொருவரும் அனுப்பும் மெசேஜை படித்து பின் குருப்பில் அனுமதிக்கவும் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அப்டேட் எப்போது வரும்
இந்த அப்டேட் இப்போதே வாட்ஸ் ஆப் பீட்டா வர்ஷனில் வந்துவிட்டது. பீட்டா வர்ஷனில் தற்போது இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் சாதராண வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனில் இந்த அப்டேட் செயல்பாட்டிற்கு வரும் என்று நம்பலாம். இன்னும் யூ டியூப் பார்க்கும் வசதி, குரூப் வீடியோ கால் வசதி என நிறைய வசதிகள் சேர்க்கப்பட இருக்கிறது.

வாட்ஸ் ஆப் அப்டேட்
சமீப காலமாக வாட்ஸ் ஆப்பில் அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications