உலகம் முழுக்க ஒரு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. பதைத்து போன நெட்டிசன்கள்! காரணம் என்ன?
பிரபல அப்ளிகேஷனான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: பிரபலமான அப்ளிகேஷனான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனது. இந்தியா மற்றும் சில நாடுகளில் வாட்சப் திடீரென்று வேலை செய்யாமல் நின்று போனது .
பலரும் இது குறித்து பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகியிருக்கிறது.மேலும் சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின் தற்போது மீண்டும் வேலை செய்ய தொடங்கி இருக்கிறது.
தற்போது வாட்சப் வேலை செய்யாமல் போனதிற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வாட்சப்பில் வேலை செய்யும் நபர் ஒருவர் விளக்கம் அளித்து இருக்கிறார். இதற்கு பின்பு நிறைய திட்டங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

நின்று போன வாட்சப்
இன்று மதியம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென்று வாட்சப் அப்ளிகேஷன் வேலை செய்யாமல் நின்று போனது. அதன்படி நாம் அனுப்பும் மெசஜ்கள் யாருக்கும் செல்லாமல், பிறர் அனுப்பும் மெசஜ்கள் நமக்கு வராமல் இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு வாட்சப் ஓபன் செய்ததும் 'கனெக்டிங்' என்ற வார்த்தை மட்டும் வந்து இருக்கிறது. அதன்படி இந்தியா, சிங்கப்பூர் , ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்சப் செயல் இழந்து இருக்கிறது.
|
ட்ரெண்ட் ஆனா விஷயம்
இதையடுத்து குழம்பிப் போன வாட்சப் பயனாளர்கள் உடனடியாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதம் செய்ய தொடங்கினார். அதில் உலகம் முழுக்க நிறைய பேருக்கு இந்த பிரச்சனை வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் வாட்சப் வேலை செய்யவில்லை. வாட்சப் செயல் இழந்த விஷயத்தை சிலர் டிவிட்டர் பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் சரியானது
இந்த பிரச்சனை பல விதங்களில் விவாதிக்கப்படுகிறது. தீவிரவாத கண்ணோட்டம் இதில் இருக்கிறதா என்றும் ஆராயப்பட்டது. இந்த பிரச்சனை காரணமாக வாட்சப் நிறுவனம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தது. அதன்பின் சரியாக அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு பின் வாட்சப் மீண்டும் சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. சமூக வலைத்தளங்கள் முழுக்க இதை குறித்தே விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய காரணம்
இந்த நிலையில் தொடக்கத்தில் இதற்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதன்பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது இதற்கு புதிய காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வாட்சப் சில நாட்களாக நிறைய அப்டேட்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வாட்சப் நிறுவனம் வெளியிட இருக்கிறதாம். மேலும் அதில் நிறைய வித்தியாசமான வசதிகளை ஏற்படுத்த இருக்கிறதாம். அதை சோதனை செய்யும் போது தவறுதலாக இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications