புதிய வாய்ஸ் நோட் முறை.. 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி.. பரபர வாட்ஸ் ஆப் அப்டேட்!
வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் 1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது.
டெல்லி: வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் 1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது.
அதேபோல் வாய்ஸ் நோட் அனுப்புவதில் மாற்றம் வர இருக்கிறது. பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

டெலிட்
இப்போது நாம் அனுப்பிய மெசேஜ்களை 7 நிமிடத்திற்குள் இரண்டு பேருக்கும் டெலிட் செய்யலாம். 7 நிமிடம் சென்றுவிட்டாள் நமக்கு மட்டுமே டெலிட் செய்ய முடியும். பாதுகாப்பிற்காக இந்த 7 நிமிட கணக்கு இருந்தது.

கூடுதல்
தற்போது இந்த நேரம் 1 மணி நேரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. 1 மணி நேரத்திற்குள் டெலிட் செய்து கொள்ள முடியும். ஆனால் இது நிறைய தற்காலிக மெமரியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

வாய்ஸ் நோட்
இதுவரை இருந்த வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை அதில் இருக்கும் மைக் சிம்பிளை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் புதிய அப்டேட்டில் மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்.

எப்போது வரும்
தற்போது வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது. இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும். பீட்டாவில் மிகவும் சரியாக இது செயல்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications