உஷார் மக்களே.. பார்வேர்ட் மெசேஜ்களை காட்டி கொடுக்கும் வாட்ஸ் அப்.. அடடே அப்டேட்!
வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் இனி பார்வேர்ட் மெசேஜ்களை எளிதாக கண்டறியும் வசதி உருவாக்கப்பட உள்ளது.
டெல்லி: வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் இனி பார்வேர்ட் மெசேஜ்களை எளிதாக கண்டறியும் வசதி உருவாக்கப்பட உள்ளது. பல பிரச்சனைகளை தீர்க்க இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மெசேஜ் டெலிட் செய்யும் வசதிகளையும் கொண்டு வந்தது.

என்ன அப்டேட்
இப்போது வர இருக்கும் அப்டேட்டில் நிறைய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பார்வேர்ட் மெசேஜ்களை காட்டிக் கொடுப்பது. நாம் ஏற்கனவே வந்த மெசேஜையோ, அனுப்பிய மெசேஜையோ பிறருக்கு மீண்டும் அனுப்பினால் அந்த மெசேஜின் மேல் பகுதியில் சிறியதாக பார்வேர்ட் மெசேஜ் என்ற லேபிள் இருக்கும்.

மாற்றலாமா?
இது வர இருக்கும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. இதை யாரும் மாற்ற முடியாது. கண்டிப்பாக நாம் பார்வேட் மெசேஜ் அனுப்பினால் பிறருக்கு காட்டிக் கொடுத்துவிடும். பிறர் நமக்கு அனுப்ப கூடிய பார்வேர்ட் மெசேஜ் குறித்த விவரமும் இதில் இருக்கும். ஆனால் யாரிடம் இருந்து பார்வேர்ட் செய்கிறார் என்ற விவரம் இதில் இருக்காது.

ஏன் இப்படி
இதன் மூலம் அதிக பார்வேர்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுவது குறையும். அதேபோல் போலியான மெசேஜ்களை அதிகம் அனுப்புவது குறையும். பிறர் அனுப்பிய மெசேஜ்களை நாமாக அனுப்புவது போல ஏமாற்றுவதும் குறையும். முக்கியமாக ஒரே மெசேஜை பலருக்கு பார்வேர்ட் செய்து டார்ச்சர் செய்வதும் இனி அடியோடு குறையும்.

எப்போது வரும்
தற்போது வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது. இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும். பீட்டாவில் மிகவும் சரியாக இது செயல்படுகிறது. அதேபோல் இதில் வாட்ஸ் ஆப் கேலரி என்று வசதியும் செய்து கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அது உறுதியாக வருமா என்று அறிவிக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications