முஸ்லீம் இறந்தால் ரூ.20 லட்சம், அதுவே இந்து என்றால் ரூ.20,000 கூட கொடுக்க மாட்டார்கள்: சாக்ஷி மஹராஜ்
டெல்லி: முஸ்லீம்கள் இறந்தால் ரூ.20 லட்சம் அளிப்பார்கள், இந்துக்கள் இறந்தால் ரூ.20 ஆயிரம் கூட கொடுக்க மாட்டார்கள் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரியில் முகமது அக்லாக்(50) என்பவரும், அவரது 22 வயது மகனும் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி பிசாரா கிராமத்தினர் அவர்களை அடித்து நொறுக்கினர். இதில் அக்லாக் பலியாகினார், அவரது மகன் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அக்லாக்கின் குடும்பத்தாருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக எம்.பி. சாக்ஷி மஹராஜ் கூறுகையில்,
ஒரு முஸ்லீம் இறந்தால் அவர்கள் ரூ.20 லட்சம் அளிப்பார்கள். அதுவே ஒரு இந்து இறந்தால் ரூ.20 ஆயிரம் கூட அளிக்க மாட்டார்கள் என்றார்.
இந்துக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். அதற்கு அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தாத்ரி சம்பவத்திற்கு சமூக நிறம் பூசிவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் பப்பு தாத்ரி சென்றுள்ளார். அரசியலில் ஏ,பி,சி,டி கூட தெரியாத அவர் தற்போது வரை அமெரிக்காவில் இருந்தார். தற்போது தாத்ரிக்கு சென்றுள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications