For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரபாபு நாயுடுவை சீமாந்திரா முதல்வர் என்று தவறாக அறிமுகப்படுத்திய சித்தராமையா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நடந்த கூட்டம் ஒன்றில் சந்திரபாபு நாயுடுவை ஆந்திராவுக்கு பதில் சீமாந்திரா முதல்வர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரிக்கப்பட்ட தனது மாநிலத்தில் தொழில்நுட்ப முதலீடுகள் பெறுவது தொடர்பாக பெங்களூர் வந்தார். பெங்களூரில் அவர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார். அப்போது நாயுடு சித்தராமையாவுக்கு திருப்பதி ஏழுமலையான் சிலை ஒன்றை பரிசளித்தார். பதிலுக்கு சித்தராமையா நாயுடுவுக்கு மைசூரின் பாரம்பரிய டர்பனை பரிசளித்தார்.

When Siddaramaiah Introduced His Friend 'Chandrababu Naidu, Seemandhra Chief Minister'

சித்தராமையா நாயுடுவை பிறருக்கு அறிமுகப்படுத்தி வைக்கையில் இவர் தான் சீமாந்திரா முதல்வர் என்று தவறாகக் கூறினார். இதை கேட்ட நாயுடு சிரித்துக் கொண்டே நான் ஆந்திரா முதல்வர் என்று சித்தராமையாவிடம் தெரிவித்தார்.

சித்தராமையாவும் சிரித்துக் கொண்டே தனது தவறை திருத்திக் கொண்டார். தற்போதைய சந்திப்பில் அவர்கள் கால்வாய்களை நவீனப்படுத்துவது பற்றி பேசியுள்ளனர். தொழில்நுட்ப விவகாரத்தில் சித்தராமையாவுக்கும், நாயுடுவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பம் என்று வந்தால் ஆந்திராவை பின்னுக்குத் தள்ளி கர்நாடகம் முன் வரிசையில் இருக்கும்.

English summary
Karnataka CM Siddaramaiah introduced his Andhra counterpart Chandrababu Naidu as Seemandhra CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X