பல்லே, பல்லே: பஞ்சாபி பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி, ஹர்சிம்ரத்
பதின்டா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்தில் இருக்கும் தஷ்மேஷ் பெண்கள் கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவிகள் பஞ்சாப் மாநில நாட்டுப்புற பாடல்களை மேடையில் பாடி ஆடினர். அப்போது ஸ்மிருதியும், ஹர்சிம்ரத் கவுரும் மேடைக்கு வந்து கைகளை கோர்த்துக் கொண்டு ஆடினர். பின்னர் ஸ்மிருதி வெட்கப்பட்டுக் கொண்டு சென்றுவிட்டார்.
ஹர்சிம்ரத் கவுர் ஒரு சில ஸ்டெப்ஸ் போட்டார். மத்திய அமைச்சர்கள் இருவர் நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. அந்த கல்லூரி விழாவில் பஞ்சாப் மாநில முதல்வர் பர்காஷ் சிங் பாதலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் ஸ்மிருதியும், ஹர்சிம்ரத்தும் பேசிப் பார்த்தவர்களுக்கு அவர்கள் சேர்ந்து நடனம் ஆடியது வியப்பை அளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications