''மோடிக்கு காங்கிரஸ் குழி தோண்டினால் அதில் ராகுல் குதிச்சிடுறாரே''!
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி பற்றி ட்விட்டரில் பலர் காமெடியாக ட்வீட் செய்துள்ளனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவர் பேட்டியின்போது பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அதிகம் பேசினார்.
இந்நிலையில் அவரது பேட்டி குறித்து ட்விட்டரில் நடக்கும் கூத்தை கொஞ்சம் படித்து சிரியுங்கள்.

சவகுழி
ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் நரேந்திர மோடிக்கு சவகுழி தோண்டினால் அதில் ராகுல் காந்தி வந்து குதித்துவிடுகிறார்.

அப்பாவி
தன் அப்பாவி குழந்தைக்கு மீண்டும் இப்படி ஒரு அநியாயம் நடக்காமல் இருக்க தனியார் டியூஷன் வாத்தியார்களை தேடிக் கொண்டிருக்கிறார் சோனியா.

பெண்கள் முன்னேற்றம்
கேள்வி: உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?
பதில்: பெண்கள் முன்னேற்றம்
கேள்வி: முன்னேற்றம் என்ற வார்த்தையின் எழுத்துக்களை சொல்லுங்கள் பார்ப்போம்
பதில்: உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

காமெடி
இது போன்று யாராலும் ஒரு மணிநேரத்தில் காமெடி செய்ய முடியாது என்று ராகுலின் பேட்டியை பார்த்த தன் தந்தை தெரிவித்ததாக ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

மன்மோகன்
காங்கிரஸ் எப்பொழுதுமே சமன் செய்கிறது. பப்பு போன்று உளறுபவர் இருப்பதால் மன்மோகன் மௌனமாகத் தான் இருக்க வேண்டும்.

கோழியா, முட்டையா?
கேள்வி: முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா?
பதில்: நாங்கள் கோழி முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி முட்டையை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அளிப்போம்.

அம்மா
என்ன கேள்வி கேட்டாலும் தகவல் அறியும் உரிமை சட்டம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைஞர்கள் அரசியல் என்ற 3 வார்த்தைகளை நினைவு கூர்ந்து பதில் அளிக்குமாறு அம்மா அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் போல்.

பேட்டி
பேட்டி முடிந்த பிறகு, சோனியா: பேட்டி எப்படி இருந்தது ராகுல்?
ராகுல்: எல்லா கேள்விகளும் அவுட் ஆப் சிலபஸ் அம்மா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications