இரவெல்லாம் "அது" பக்கத்திலயே படுத்து.. போன்ல யாரு? ஜோதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்? அதுக்கு இப்படியா
கான்பூர்: ஜோதிக்கு நிறைய ஆண் நண்பர்களாம். எந்நேரமும் போனிலேயே இருந்ததாக, கணவர் சந்தேகப்பட்டுள்ளார். இந்த சந்தேகம்தான் விபரீத முடிவுக்கு சென்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது பிஜ்னோர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ராம் லகான்.. இவருக்கு 32 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஜோதி.. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகின்றன.. பாயல், ஆனந்த் என்று 6 மற்றும் 3 என்ற வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்..

சந்தேகம்: ஆனாலும், திருமணமானதிலிருந்தே மனைவியின் நடத்தை மீது ராமுக்கு சந்தேகம் இருந்து வந்தது.. குறிப்பாக, நிறைய ஆண்களிடம் ஜோதிக்கு தவறான தொடர்பு இருப்பதாக ராமுக்கு சந்தேகம் வலுத்து வந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் வந்துள்ளன.. ஒருகட்டத்தில் ஜோதியின் செல்போனை கேட்டு, சண்டை போட்டு வந்தார் ராம்.
தம்பதிக்குள் எந்நேரமும் பிரச்சனை இருந்துவருவது அக்கம்பக்கத்திலிருந்தவர்களுக்கும் தெரியும் என்றாலும், தம்பதியை சமாதானம் செய்ய முடிவதில்லையாம். இப்படிப்பட்ட சூழலில், திடீரென ராம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், ஜோதியும் குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்ததால், ஜோதி எங்கே? என்று அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர்.
துர்நாற்றம்: அதற்கு ராம், ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக 3 பேருமே சொந்த ஊருக்கு போயிருக்கிறார்கள்" என்றார்.. உடனே அக்கம்பக்கத்தினர், வீட்டிற்குள்ளிருந்து ஏன் துர்நாற்றம் அதிகமாக வருகிறது? என்று கேட்டார்கள்.. ஆனால், இதற்கு ராமு சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
உடனடியாக போலீசாரும் விரைந்து வந்து ராமின் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது சாக்கு மூட்டைகளில் ரத்தம் உறைந்து கிடந்தது. இதனால், அந்த மூட்டையை திறந்து பார்த்தால், ஜோதியும், 2 குழந்தைகளும் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. இதையடுத்து, ராமிடம் விசாரணையை மேற்கொண்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியின.
மூட்டைகள்: அதாவது, கடந்த 28-ம் தேதி நள்ளிரவு, தம்பதிக்குள் வழக்கம்போல், சந்தேகம் காரணமாக தகராறு வந்துள்ளது.. அப்போதுதான், ஆவேசமடைந்த ராம், ஜோதியின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். இதை அந்த 2 குழந்தைகளும் பார்த்து அலறியிருக்கிறார்கள்.. உடனே அந்த குழந்தைகளையும் ராமு கொலை செய்து, 2 பேரையும் ஒரே மூட்டையில் கட்டியிருக்கிறார். பிறகு சடலத்தை எங்கே கொண்டுபோய் போடுவது என்று தெரியாமல், வீட்டிற்குள்ளேயே மூட்டையில் கட்டி வைத்துள்ளார்.
அன்றைய இரவு முழுவதும் சடலங்களுடன்தான் தூங்கியிருக்கிறார்.. மறுநாள் காலையில் குளித்து முடித்து, வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்துள்ளார்.. இரவு அந்த மூட்டைக்கு பக்கத்திலேயே படுத்து தூங்கியிருக்கிறார்.. இப்படியே 3 நாட்களும் சடலங்களுடன் படுத்திருக்கிறார்..
அதிர்ச்சி: இதையெல்லாம் கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். இறுதியில், மூட்டையை கைப்பற்றி, சடலங்களை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இப்போது ராம் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. செல்போன் கேட்டும் கொடுக்காத ஆத்திரத்திலும் சந்தேகத்திலும், ஜோதியை கொன்ற சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications