இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி திரட்டிய 100 கிலோ தங்கம் மாயம்- 'திடுக்' தகவல்
டெல்லி: நாடு விடுதலை அடைவதற்காக தனி ராணுவத்தை அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்த ராணுவத்துக்காக திரட்டிய 100 கிலோ தங்கம் மாயமானதாக திடுக்கிடும் தகவல்கள்வெளியாகி உள்ளன.
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவை மீட்பதற்காக வெளிநாடுகளில் இந்தியர் துணையுடன் ராணுவத்தை அமைத்து யுத்தம் நடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது இந்திய தேசிய ராணுவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பணம், தங்க நகைகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டன.

அப்படி நன்கொடையாக வந்த 100 கிலோ தங்க நகைகள், நேதாஜியின் மறைவுக்கு பின்னர் மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2வது உலகப்போரின் போது இந்த தங்கத்தின் ஒரு பகுதியை ஜப்பான் ராணுவம் கைப்பற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மாயமான இந்த தங்கத்தை மீட்க நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.
நேதாஜியின் மரணத்தில் உள்ள மர்மம் போலவே அவரது ராணுவத்துக்கு நன்கொடையாக வந்த தங்கம் மாயமானதும் மர்மமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நேதாஜியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications