பட்ஜெட்: கடைசி அறிவிப்பை கேட்டு அவ்வளவு குஷியாகி புன்னகைத்த மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி ஒரேயொரு அறிவிப்பை கேட்டதுடன் புன்னகைத்தார்.

2015-2016ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதுகு வலி காரணமாக அவர் பட்ஜெட்டின் பெரும்பகுதியை இருக்கையில் அமர்ந்தபடியே வாசித்தார்.

Which announcement of Jaitley made Modi smile?

ஜேட்லி அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். சில அறிவிப்புகளுக்கு அவையில் இருந்தவர்கள் அமைதி காத்தனர். சில அறிவிப்புகளுக்கு மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர். அவையில் இருந்த பிரதமர் மோடியும் சில அறிவிப்புகளுக்கு மேஜையை தட்டி பாராட்டினார்.

பெரும்பாலான நேரம் மோடி சீரியஸான முகத்துடன் அமர்ந்திருந்தார். ஆனால் ஜேட்லியின் கடைசி அறிவிப்பை கேட்டதும் மோடியின் முகத்தில் பளிச்சென புன்னகை. மோடி முகம் மலரக் காரணமான அறிவிப்பு இது தான்.

யோகா, அறக்கட்டளையின் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும். யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கப்படும் என்று ஜேட்லி அறிவித்ததை கேட்டுத் தான் மோடிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

யோகாவின் முக்கியத்துவம் பற்றி மோடி அவ்வப்போது பேசி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+