ஜெயலலிதா இருக்கும் சிறையில் ஜனார்தனன் ரெட்டி, தெல்கி, 'சைகோ' ஜெய்சங்கர், மதானி!!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் யார், யார் இருக்கிறார்கள் என்று தெரியுமா?
ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சிறையில் யார், யார் எல்லாம் இருக்கிறார்கள் என பார்ப்போம்,

ஜனார்தனன் ரெட்டி
சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் உள்ளார். இவர் சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளாராம். அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அப்துல் கரீம் தெல்கி
முத்திரை தாள் மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்துல் கரீம் தெல்கியும் பரப்பன அக்ரஹாராவாசி தான்.

ஜெய்சங்கர்
பல்வேறு கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சைக்கோ ஜெயசங்கரும் பரப்பன அக்ரஹாராவில் தான் உள்ளான்.

மதானி
2008ம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியும் பரப்பன அக்ரஹாராவில் உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications