கோச்சடையான் படத்தில் நடித்தவர் பெயர் என்ன? - ரிசர்வ் வங்கி தேர்வில் கேள்வி!!
மும்பை: ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான தேர்வில், கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன? மற்றும் பாபிஷாப் இந்திப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன? - ஆகிய இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான (கிரேட்-2) தேர்வு நாடு முழுவதும் ஆன்-லைன் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கணிதம், அறிவுக் கூர்மை, ஆங்கிலம், பொது அறிவு என நான்கு பிரிவுகளில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
அறிவுப் பிரிவில் மொத்தம் 80 வினாக்கள் கேட்கப்பட்டன. அதில், 42-வது வினாவாக, கோச்சடையான் படத் தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பதில்கள் தரப்பட்டிருந்தன.
மற்றொரு கேள்வியாக இந்தியில் வெளியான பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன எனக் கேட்டு வித்யாபாலன், கரினா கபூர், பிரியங்கா சோப்ரா, இவர் களில் யாரும் இல்லை எனப் பதில்கள் தரப்பட்டிருந்தன.
இப்படி சினிமா தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதற்கு சிலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு தரப்போ, இதில் தவறென்ன இருக்கிறது..? விளையாட்டைப் போலத்தான் சினிமாவும் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. விளையாட்டுத் துறைப் பற்றி கேள்வியை அனுமதிக்கும் நாம், சினிமா கேள்வி என்றதும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை, என்று தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications