யார் இந்த ஓஷின் சர்மா? அரசு அதிகாரி.. இன்ஸ்டா பிரபலம்.. வேலைக்கு வேட்டு வைத்த ரீல்ஸ் வீடியோக்கள்!
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த ஓஷின் சர்மா, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரியான ஓஷின் சர்மா இந்தியா முழுவதும் இப்போது பிரபலம். காரணம், அவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ்வாக இருந்து பல லட்சம் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்.
இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓஷின் ஷர்மா சிம்லாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். ஓஷினின் தந்தை புவனேஷ்வர் சர்மா மற்றும் அவரது தாயார் இருவரும் அரசு வேலையில் பணியாற்றியவர்கள். ஓஷின் சர்மா சிறுவயதில் ஒரு டாக்டராக விரும்பி உள்ளார். ஆனால், ஒஷின் சர்மா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னாளில் பத்திரிகையாளராக வேண்டும் என விரும்பிய ஓஷின் சர்மா, குடும்பத்தினரின் விருப்பம் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். குடிமைப் பணி அதிகாரியாகும் வாய்ப்பை ஓஷின் சர்மா, சொற்ப மதிப்பெண்களில் இழந்தார். இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், ஓஷின் சர்மா, HAS (Himachal Administrative Services) தேர்வில் வெற்றிபெற்று BDO ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சந்தோல் தாசில்தாராக பணியாற்றி வந்த ஓஷின் சர்மாவை சமீபத்தில் இடமாற்றம் செய்து ஹிமாச்சல பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஓஷினுக்கு இப்போது பணி எதுவும் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சிம்லாவில் உள்ள பணியாளர்கள் துறைக்கு விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஓஷின் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். ஓஷின் சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது தனிப்பட்ட ரீல்கள் மற்றும் அவரது பேச்சுகளை பதிவேற்றுகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் வேலையில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.
மண்டி டிசி அபூர்வ் தேவ்கன் ஓஷின் சர்மாவின் பணியை மதிப்பாய்வு செய்தபோது, அவரது நிர்வாகப் பணிகள் பல சரியான நேரத்தில் செய்யப்படுவதில்லை என்று தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக ஓஷின் சர்மா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஓஷின் சர்மா விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு, அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஓஷின் ஷர்மா, தர்மஷாலாவைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ விஷால் நெஹ்ரியாவை மணந்தார். ஆனால், திருமணமாகி மூன்றே மாதங்களில், சமூக வலைதளங்களில் தனது கணவர் தன்னை தாக்கியதாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர்.
ஓஷின் ஷர்மா சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். வங்கதேச பிரச்சனை முதல் இட ஒதுக்கீடு வரையிலான விஷயங்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் லட்சக் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.
அவரது சமூக வலைதள பிரபலத்தன்மையே தற்போது அவரது வேலைக்கு வேட்டு வைத்து உள்ளது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ள ஓஷின் சர்மா, தான் பார்த்து வரும் அரசு வேலையில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications