ஒரே ஒரு சொல்.. சினிமாவையே மிஞ்சுதே.. ஷேக் ஷாஜகான் எங்கே? முதல்வரின் சைலண்ட்.. இந்து முன்னணி சுருக்
கொல்கத்தா: ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தேசம் முழுதும் ஓரணியில் திரண்டு, சந்தேஷ்காலி கிராம பெண்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டியது அவசியம் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக்.
குற்றச்சாட்டுகள்: இவரும், இவரது ஆதரவாளர்களும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இது தொடர்பாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 2 இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. எனினும், ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்துஅறிக்கை தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தேசிய பழங்குடியின ஆணையம் கடந்த 20-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுதும் ஓரணியில் திரண்டு, அக்கிராம பெண்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது அவசியம் என்று இந்து முன்னணி வலியுறுத்தியிருக்கிறது.
இந்து முன்னணி: இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"வங்கதேச எல்லையை ஒட்டிய தீவு கிராமமான மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில், பட்டியல் ...பழங்குடி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வங்கதேச எல்லையை ஒட்டிய தீவு கிராமமான மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில், பட்டியல் பழங்குடி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பிறகு, ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினரின் புகலிட...மாக அம்மாநிலம் மாறியுள்ளது. சந்தேஷ்காலியைச் சேர்ந்த ஷேக் ஷாஜஹான் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, முதல்வர் மம்தாவின் திரிணமுல் காங்கிரசுக்கு தாவி, சந்தேஷ்காலி பகுதியில் தலைவராக உருவெடுத்துள்ளார்.
ஷேக் ஷாஜஹான் அரசியல் தாதாவாக உருவெடுத்து, பட்டியல் சமூகத்தினர்களின் நிலங்களை பறித்து, இறால் பண்ணைகளை அமைத்து, நில உரிமையாளர்களான பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினரை. கொத்தடிமைகளாக மாற்றி, ஊதியம் கூட வழங்காமல் கொடுமை செய்துள்ளார். அவரது கும்பல் அரங்கேற்றிய பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சினிமாவையே மிஞ்சுகிறது.
கொடுமை: இந்த கொடூரம், சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த 13 ஊராட்சிகள் வரை நீண்டுள்ளது. ஆதாரம் திரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, புகார் கொடுப்பவர்களிடமே ஆதாரம் கேட்டு மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளது. ஷேக் ஷாஜகானை கைது செய்ய முனைப்பு காட்டாமல், அம்மாநில முதல்வர் மவுனம் காத்து வருகிறார்.
தேசிய பட்டியல் சமுதாய ஆணையம் நேரடி விசாரணை நடத்தி, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, சட்டத்தின் ஆட்சி முடக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்து, மாநில அரசை உடனடியாக கலைக்குமாறு அறிக்கை கொடுத்துள்ளது. தேசம் முழுதும் ஓரணியில் திரண்டு, அக்கிராம பெண்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது அவசியம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications