படுக்கையறை "விருந்தாளி".. அதென்ன பல்ப் "ஹோல்டரில்".. பக்கத்துல பொண்ணு வேற.. வசமா சிக்கிய பாஜக தலைவர்
போபால்: இப்போதெல்லாம் உல்டாவாகிவிட்டது.. கலிகாலம், எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.. ஒரு நபரை கடத்திக்கொண்டுபோய், ஆபாச வீடியோக்களை எடுத்திருக்கிறார் ஒரு பெண்..!!
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் வசித்து வருபவர் தீபக் ஜெயின்... இவர் மிகப்பெரிய ஜவுளி தொழிலதிபராவார்.. சோஷியல் மீடியாவில் இவருக்கு, பெண் ஒருவர் பழக்கமானார்.. "நீங்கள் என்னுடைய சொந்த அண்ணா மாதிரி" என்று அந்த பெண், தீபக்கிடம் நெருங்கி பழகி வந்தார்.

கடன் தொகை: கொஞ்ச நாட்கள் ஆனதும், அவசர தேவைக்காக, ரூ.5500 கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. தீபக்கும் அந்த பணத்தை தந்துள்ளார்.. ஆனால், பல நாளாகியும், அந்த கடனை அவர் திருப்பி தரவேயில்லை.. ஒருநாள் அந்த பெண்ணிற்கு தீபக் போன் செய்துள்ளார்.. கடன் தொகை பற்றியும் கேட்டுள்ளார்.
அப்போது அந்த பெண், தன்னுடைய வீட்டுக்கு வந்து, பணத்தை வாங்கி செல்லுமாறு சொல்லி உள்ளார்.. இதனால் தீபக்கும், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. தீபக்கை வரவேற்று, சோபாவில் உட்கார வைத்து, டீ போட்டு வந்து தந்தார்.. ஆனால், அதில், போதைப்பொருளை கலந்திருக்கிறார். இது தெரியாமல் தீபக்கும், டீ குடித்து, அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கிவிழுந்துள்ளார். அப்போது, அவருடன் நெருக்கமாக இருப்பது போன்று ஆபாச வீடியோக்களையும், போட்டோக்களையும் எடுத்திருக்கிறார் பெண்.
மயக்க நிலை: மயக்க நிலையில் இருந்த தீபக், சுயநினைவு திரும்பியவுடன் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.. சில நாட்களிலேயே, அந்த ஆபாச வீடியோவை, தீபக்கின் நண்பர் ஒருவர் அனுப்பியிருக்கிறார்.. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தீபக், உடனடியாக போலீசுக்கு சென்று புகார் தந்தார்...
அப்போது போலீசில் தீபக் சொல்லும்போது, "வாங்கிய கடனை திருப்பி தருவதாக சொல்லி, அந்த பெண், அவருடைய வீட்டிற்கு கூப்பிட்டார்.. டீயில் போதை மருத்தை கலந்து கொடுத்தே, இந்த ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு, 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறினார்.
புகார்கள்: இதனால் என் மானமே போய்விடும் என்பதால், இதுகுறித்து வெளியே சொல்லவில்லை. இப்போது, அந்த வீடியோ சோஷியல் மீடியா முழுவதுமே வெளியாகிவிட்டது. அதனால்தான் புகார் தந்திருக்கிறேன் என்றார்.
இந்த புகாரையடுத்து, போலீசார் விசாரணையில் குதித்தனர்.. அந்த பெண், யார் என்ற விவரங்களையும் ஆராய்ந்து அதிர்ந்தே போனார்கள்.. அந்த பெண்ணின் கணவர் பெயர் தேவேந்திர ஜடான்.. தம்பதி இருவரும் சேர்ந்தே இந்த, ஆபாச வீடியோவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.. இந்த இந்த பாலியல் மோசடிக்கு, ராம் சோனி என்பவர்தான் மூளையாக இருந்து வந்துள்ளார்.. இவர் ஒரு உள்ளூர் பாஜக தலைவர் ஆவார்..
தொழிலதிபர்கள்: இந்த பாஜக தலைவருக்கு, அந்த பெண்ணிடம் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.. அந்த பெண்ணை பயன்படுத்தியே, பல தொழிலதிபர்களை பாலியல் வலையில் சிக்க வைத்ததும், அவர்களிடம் பணத்தை கறந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது..
தீபக் வழக்கில் மட்டுமே 6 பேர் கைதாகி உள்ளனர்.. இதற்கு பிறகு, அந்த பெண்ணின் வீட்டிற்கு போலீசார் நேரடியாக சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது, வீட்டு பல்பின் ஹோல்டரில், கேமராக்களை ரகசியமாக மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது..
அந்த கேமராவில் படும்படியாகவே, படுக்கையும் செட்டப் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பல்ப் ஹோல்டரை போலீசார் கழட்டி பார்த்தபோது, கேமராவில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் பதிவாகியிருந்ததும், அத்தனை ஆபாச வீடியோவிலும் பல தொழிலபதிர்களுடன் நெருக்கமாக இந்த பெண் இருப்பதும் பதிவாகி இருந்தது. இதைத்தவிர, ஏகப்பட்ட ஆபாசமான DVD-க்களை அந்த பெண் தன்னுடைய வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது..
விஐபிகள்: வீட்டின் பல பகுதிகளில் பல்ப் ஹோல்டர்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள், லேப்டாப்கள், உட்பட உபகரணங்களை போலீசார் மீட்டுள்ளனர். பாஜக தலைவருடன் நெருக்கம் என்பதால், இந்த பாலியல் மோசடியில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள்.. அதுகுறித்த அடுத்தக்கட்ட விசாரணையில் போலீசார் தீவிரமாகி உள்ளனர்.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
துருக்கி அழகி + 1 பில்லியன் டாலர் வரதட்சணை! உகாண்டா ராணுவ தளபதி வைத்த டிமாண்டை பாருங்க -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications