மானமே போகுது.. ஆடையை கழற்ற சொல்லி.. நீதிபதி ரூமிலிருந்து அழுதுட்டே வந்த பெண்? என்ன நடக்குது நாட்டில்
ஜெய்ப்பூர்: திரிபுரா சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் முடிவடையாத நிலையில், இன்னொரு கொடுமை நம்முடைய நாட்டில் நடந்துள்ளது..!!
பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..

பெண்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்கள் துணை நிற்கின்றன.. அப்படிப்பட்ட நீதிமன்றத்திலேயே வக்கிரம் அரங்கேறினால்?? சமீபத்தில்கூட திரிபுராவில் ஒரு சம்பவம் நடந்தது.
வக்கிரங்கள்: தலாய் மாவட்டத்தில் வசித்து வருகிறார் அந்த 22 வயது பெண்.. சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் 26 வயது இளைஞர் புகுந்து, தனியாக இருந்த இந்த பெண்ணை, மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துவிட்டார்.. இதையடுத்து, அந்த பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்கு ஆரம்பமானது..
அதன்படி, வாக்குமூலம் அளிக்க வரும்படி அந்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட் சொல்லி உள்ளார்.. அதன்படியே, திரிபுராவின் கமால்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்ற அறைக்கு வாக்குமூலம் தருவதற்காக அந்த பெண் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த நீதிபதி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தாராம்.. ஏற்கனவே பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருந்த அந்த பெண், மாஜிஸ்திரேட் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, இன்னொரு புகாரை போலீசில் தந்தார்.
வாக்குமூலம்: அந்த புகாரில், "வாக்குமூலம் தருவதற்காக மாஜிஸ்திரேட்டின் ரூமுக்குள் நுழைந்தேன்.. அப்போது நீதிபதி, அங்கிருந்த பெண் போலீசாரிடம், சிறிதுநேரம் வெளியே இருக்கும்படி சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார்.
பிறகு, கதவை மூடிய நீதிபதி, எனக்கு என்ன நடந்தது? என்று சொல்லும்படி கேட்டார். நான் வாக்குமூலம் தந்தேன்.. அப்போது, மாஜிஸ்திரேட் என்னை திடீரென பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்...
வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்தபோதே, வாக்குமூலம் வாங்கிக்கொண்டிருந்த நீதிபதி, என்னை பாலியல் நோக்கத்துடன் தொட்டு தொல்லை கொடுத்தார். உடனே நான் அவரது ரூமை விட்டு வெளியே ஓடிவந்து, வழக்கறிஞர்கள் மற்றும் என்னுடைய கணவருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன்" என்று தெரிவித்திருந்தார்.
கணவரும் புகார்: அத்துடன், கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் அந்த பெண் புகார் செய்தார். அதேபோல, அப்பெண்ணின் கணவரும், பார் கவுன்சிலில் இன்னொரு புகாரை நீதிபதி மீது அளித்தார். இத்தனை புகார்களும் சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்து அந்த மாநில ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அதிரடி தீர்ப்பின் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இன்னொரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
கரோலி மாவட்டம், ஹிண்டோன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடந்த மாதம் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மார்ச் 27ம் தேதி அந்த பெண், போலீசில் புகார் தந்தார்.. இது தொடர்பாக கடந்த 30ம் தேதி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அந்த பெண் ஆஜரானார்.
அதிர்ச்சி: அப்போது, விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், அந்த பெண்ணிடம் ஆடைகளை கழற்றி, உடலிலுள்ள காயங்களை காட்டுமாறு சொன்னாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காயங்களை காட்ட மறுத்துள்ளார்..
வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அந்த பெண், காவல் துறை (எஸ்டி,எஸ்சி பிரிவு)டிஎஸ்பி மீனாவிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக பெண்ணை முறையின்றி அடைத்து வைத்ததற்காகவும், வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மாஜிஸ்திரேட் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்னொரு மாஜிஸ்திரேட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
தூண்கள்: இந்தியாவை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களுக்காக, எத்தனையோ நீதிபதிகள் குரல் கொடுத்துள்ளார்கள்.. அப்பெண்களுக்கு பக்கபலமாக நின்று, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தந்து, பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும், இதுபோன்ற ஒருசில நீதிபதிகளால், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் வலிமை மிக்க "தூண்" சாய்வது சரியல்ல.. ஏற்கவும் முடியவில்லை..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications