பிளஸ் 2 மாணவி கிட்ட நெருங்கிய இளைஞர்.. அடுத்த நொடியே ஹைவேஸில் கேட்ட அந்த சத்தம்.. அதிர்ந்த ஆந்திரா
திருமலை: வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.. கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.

வாகன ஓட்டிகள்: உடம்பெல்லாம் பற்றிய தீயுடன், ப்ளீஸ் காப்பாத்துங்க என்று கதறி அழுதுகொண்டே ஓடிவந்தார்.. இளம்பெண்ணை பார்த்ததுமே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து, பதறிப்போய் தீயை அணைத்தனர். அத்துடன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதவியால் தவித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு, பத்வேல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் 80 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி இறந்துவிட்டார்.. இதையடுத்து, தப்பி ஓடிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்..

காதலர்கள்: இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "கடப்பா மாவட்டம் பத்வேல் ராமாஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்.. 20 வயதாகிறது.. இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் 17 வயது மாணவியும், விக்னேஷூம் காதலித்து வந்துள்ளனர். தற்போது இந்த மாணவி பிளஸ் 2 படிக்கிறார்..
ஆனால், மாணவி 8வது படிக்கும்போதிருந்தே இவர்கள் காதலித்து வந்திருக்கிறார்கள்.. இதனிடையே, 6 மாதத்துக்கு முன்பு விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். எனினும், மாணவியிடம் தன்னை தொடர்ந்து காதலிக்குமாறும், தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலையே செய்து கொள்வதாகவும் விக்னேஷ் மிரட்டியிருக்கிறார்.. அத்துடன் நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சம்மதம்: விக்னேஷ் தற்கொலை செய்து கொள்வதாக கூறியதால், பயந்துபோன மாணவி, விக்னேஷ் மீது இரக்கப்பட்டு அவரை சந்தித்து பேச சம்மதம் சொல்லி உள்ளார்.. அதன்படியே நெடுஞ்சாலை ஓரத்திலிருந்த காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார் விக்னேஷ். அப்போது திடீரென அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்.. அப்போது மாணவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவும், பாக்கெட்டிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து, மாணவியின் ஆடையில் தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இறப்பதற்கு முன்பு மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், இவ்வளவும் தெரியவந்துள்ளது.. தற்போது விக்னேஷை கைது செய்துள்ளோம்.. இவரது காதல் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.. சிறு வயது முதலே காதலித்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், அவரை திட்டமிட்டு வரவழைத்து எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications